Published : 11 Nov 2019 12:11 PM
Last Updated : 11 Nov 2019 12:11 PM

30 நிமிடங்களில் ரூ.70000 கோடி: ஆன்லைன் விற்பனையில் அலிபாபா புதிய சாதனை

ஷாங்காய்

அலிபாபா நிறுவனம் பிரமாண்ட ஒருநாள் விற்பனையில் முதல் 30 நிமிடங்களில் இந்திய ரூபாய் மதிப்பில் 70000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் தலைவராக இருந்தவர் ஜாக் மா. சீனாவில் இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை முழுவதுமாகத் தனதாக்கிக்கொண்டதன் மூலம் அலிபாபா 420 பில்லியன் டாலர் மதிப்புடைய நிறுவனமாக உயர்ந்துள்ளது.

ஜாக் மாவும் இதன் மூலம் 40 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் சீனாவின் முதல் பெரிய பணக்காரராக உயர்ந்தார். ஜாக் மா அலிபாபா நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அலிபாபா தனது சேவையை உலகின் பல்வேறு நாடுகளிலும் பல்வேறு தொழில்களிலும் விரிவுபடுத்தி வருகிறது. ஆன்லைன் வர்த்கத்தில் அமெரிக்காவின் வால்மார்ட், அமோசான் போன்ற நிறுவனங்களுடன் கடுமையான போட்டியிட்டு வளர்ந்து வருகிறது.

அலிபாபா நிறுவனம் குறிபிட்ட சில நாட்களில் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு பெரிய அளவில் தள்ளுபடி விற்பனையை அறிவிக்கும். குறிப்பாக
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 11-ம் தேதி மிகப்பெரிய ஆபர்களை அறிவிக்கும். 2019-ம் ஆண்டு முதல் ஒருநாள் விற்பனையை பெரிய அளவில் பிரபலப்படுத்தி வருகிறது. இன்று இந்த விற்பனை நிறைய ஆபர்களுடன், நிறைய தள்ளுபடிகளுடன் நடந்தது.

இந்தநிலையில் பிரமாண்ட ஒருநாள் விற்பனை அறிவிக்கப்பட்ட முதல் 30 நிமிடங்களில் இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.70000 கோடி அளவுக்கு விற்பனை செய்துள்ளது. ஒரு மணிநேரத்தில் இந்திய ரூபாய் மதிப்பில் 85,000 கோடிக்கு விற்பனை செய்து அலிபாபா நிறுவனம் சாதனை படைத்துள்ளது. இந்த விற்பனை இதுவரை ஆன்லைன் வர்த்தகத்தில் இல்லாத சாதனையாக கருதப்படுகிறது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் இது 22 சதவீதம் அதிகமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x