செயல்படாத சுவிஸ் கணக்குகளின் பணம் அரசிடம் ஒப்படைப்பு

செயல்படாத சுவிஸ் கணக்குகளின் பணம் அரசிடம் ஒப்படைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி

பத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகள்பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நிலையில், அவை செயலிழந்த கணக்குகளாக கடந்த 2015-ம்அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இதுவரை யாரும் அந்த வங்கிக் கணக்குகளுக்கு உரிமை கோர முன்வராததால் அக்கணக்குகளில் உள்ள தொகை அனைத்தும் சுவிஸ் அரசிடம் ஒப்படைக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது.

சுவிஸ் வங்கிகளில் கணக்கு தொடங்கி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தாதபட்சத்தில் அக்கணக்குகள் செயலிழந்த கணக்குகளாக அறிவிக்கப்படும். அவ்வாறு அறிவிக்கப்பட்ட பிறகு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் அக்கணக்கு தொடர்புடையவர்கள் வங்கியை தொடர்பு கொண்டு உரிமை கோர வேண்டும். தவறும்பட்சத்தில், அக்கணக்கில் உள்ள தொகை அனைத்தும் சுவிஸ் அரசிடம் ஒப்படைக்கப்படும்.

அதன்படி கடந்த 2015-ம்ஆண்டு 2,500 அளவிலான கணக்குகள் செயலிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அவற்றின் மொத்த தொகை ரூ.300 கோடி ஆகும். அதில் பத்துக்கும் மேற்பட்டகணக்குகள் இந்தியர்கள் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டது. சமீப காலங்கள் வரையிலும் யாரும்அக்கணக்குகள் தொடர்பாக உரிமை கோரவில்லை. இந்நிலையில் சில கணக்குகளுக்கு உரிமை கோருவதற்கான அவகாசம் அடுத்த மாதம் முடிய உள்ளது. சில கணக்குகளுக்கு அடுத்த வருடம் இறுதி வரை அவகாசம் உள்ளது.

வெவ்வேறு நாட்டினர்கள், தங்கள் நாடுகளில் முறையாக வரி செலுத்தாமல் சொத்துக்களை சுவிஸ் வங்கிகளில் பதுக்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதுதொடர்பாக உலக நாடுகள் அழுத்தம் தந்ததைத் தொடர்ந்து சுவிஸ்அரசு, அதன் வங்கிகளில் கணக்குவைத்து இருப்பவர்களின் விவரங்களை அந்தந்த நாடுகளுடன் பகிர்வதற்கு சம்மதித்தது. அதன்படி இந்தியர்கள் பட்டியல் சமீபத்தில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in