

புதுடெல்லி
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு 10 தொழில் பூங்காக் களை உருவாக்கத் திட்டமிட்டுள் ளது. மிகப் பெரிய அளவில் உரு வாக்கப்பட உள்ள இந்த தொழில் பூங்காக்கள் அனைத்தும் ஒருங் கிணைந்ததாக பல்வேறு கட்ட மைப்பு வசதிகளைக் கொண்டதாக இருக்கும்.
இத்தகைய பூங்காக்கள் அமைப் பதற்கு மாநிலங்களிடமிருந்து மிகச் சிறந்த வரவேற்பு உள்ளதாக மத்திய ஜவுளித்துறை செயலர் ரவி கபூர் தெரிவித்தார்.
ஏற்றுமதி துறையில் இந்திய தொழில்துறையினர் எதிர்கொள் ளும் சவால்களை அரசு நன்கு உணர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்து துறையினரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக தாராள வர்த்தக ஒப்பந் தத்துக்கு (எப்டிஏ) இந்திய துறை கள் தயாராக இல்லை என்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பன்னாட்டு நிறுவன போட்டி களை எதிர்கொள்ளும் அளவுக்கு தயாராக உள்ள நிலையில் எந்த ஒரு நாட்டுக்கோ அல்லது ஒரு நிறுவனத்தை கண்டோ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஒரு சில நாடுகள் ஒரு குறிப்பிட்ட துறைகளில் வலுவாக உள்ளன. அத்தகைய பொருட்கள் மீதுதான் அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
போட்டிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மெகா பூங்காக்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இவை அனைத்தும் உலக தரத்துக்கு இணையானவை. இவை பெரும்பாலும் துறைமுகங்களுக்கு அருகாமையில் அனைத்து வசதி களும் கொண்டவையாக இருக்கும் என்றார். சீனா, அமெரிக்கா இடை யிலான வர்த்தக போர் காரணமாக நிறுவனங்கள் பிற நாடுகளில் முத லீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாகக் குறிப் பிட்டார்.
தொழில் பூங்காக்களை சர்வ தேச தரத்துக்கு உருவாக்குவதோடு அதில் அந்நிய நேரடி முதலீடு களை ஈர்க்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது என்றார்.
சர்வதேச அளவுக்கு தரமான பொருட்களை இந்தியா தயாரிக் கும்போதுதான் சர்வதேச அளவி லான போட்டிகளை எதிர்கொள்ள முடியும். அந்த வகையில் ஜவுளித் தொழிலில் மிகவும் பிரபலமான பிராண்டுகளை உருவாக்க அமைச் சகம் முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
வங்கதேசத்துக்கு இந்திய பிரதி நிதிகளுடன் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளதாகவும் அப்போது இந்தியாவிலிருந்து துணிகளை வாங்குவது குறித்து பேச்சு நடத் தப்படும் என்றார். பொதுவாக ஜவுளி வர்த்தகத்தைப் பொறுத்தமட்டில் மூலப் பொருளை விற்று முழுமை செய்த ஜவுளி தயாரிப்புகளை இறக்குமதி செய்வது குறித்து பேச்சு நடத்தலாம். ஆனால் இது முந்தைய வர்த்தக பேரமாகும். இதற்கு இனி வரும் காலங்களில் இடமிருக்காது. இதனால் ஜவுளியை முன்னெடுத்து செல்லும் கொள்கையை வங்கதேசத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.