

கொல்கத்தா
தொலை தொடர்பு நிறுவனங் களுக்கு அரசு சலுகைகள் வழங்கி னால் அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அமையும் என்று ஜியோ தெரிவித்துள்ளது.
தொலை தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு ஜியோ நிறுவனம் எழுதிய கடிதத்தில் இந்தக் கருத்தை கூறியுள்ளது.
செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கம், தொலைதொடர்பு நிறு வனங்களின் மொத்த வரிகளையும், அபராதத் தொகைகளையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் முறை யிட்டு இருந்தது. அவர்களது கோரிக் கையை உச்ச நீதிமன்றம் நிராகரித் தது. இந்நிலையில் அந்நிறு வனங்களின் கோரிக்கைகளை பரி சீலிக்கும் பொருட்டு மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. இந் நிலையில்தான் அந்தக் கடிதத்தை தொலை தொடர்பு துறை அமைச் சருக்கு ஜியோ அனுப்பி உள்ளது. தொலை தொடர்பு நிறுவனங்களுக் கான வரிகளை தள்ளுபடி செய் வது, அவற்றின் அபராதத் தொகைகளை நீக்குவது ஆகியவை உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிரானது என்று அந்த கடிதத்தில் ஜியோ குறிப்பிட்டுள்ளது.
மேலும் அப்படி சலுகைகள் வழங்கினால் உச்ச நீதிமன்றத் தின் முடிவுக்கு எதிராக அரசு செயல்படுகிறது என்ற தவறான முன்னுதாரணமாக அமையும் என்று அதில் குறிப்பிட்டு உள்ளது. அந்தக் கடிதத்தை மத்திய அமைச்சரவை செயலர், நிதிதுறை, சட்டம், தொலைதொடர்பு ஆகிய துறை களின் செயலர்கள், நிதி ஆயோக் கின் தலைமை செயல் அதிகாரி ஆகியோருக்கும் அனுப்பி உள் ளது.