

புதுடெல்லி
மின்சார உற்பத்தி நிறுவனங் களுக்கு விநியோக நிறுவனங்கள் அளிக்க வேண்டிய தொகை செப்டம்பர் மாதத்தில் ரூ.69,558 கோடியாக உள்ளது. இது சென்ற ஆண்டு இதே காலத்தில் இருந்ததைவிட 37 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ,50,583 கோடி நிலுவை வைத்திருந்தன.
மின் உற்பத்தி நிறுவனங்கள் விநியோக நிறுவனங்களுக்கு வழங்கும் மின்சாரத்துக்கான தொகையை செலுத்த 60 நாட்கள் வரை கால அவகாசம் அளிக்கிறது. அதன்பிறகும் விநியோக நிறுவனங்கள் உரிய தொகையைச் செலுத்த தவறுகின்றன. இவ்வாறு இந்தக் காலக் கெடு முடிந்தும் செலுத்தப்படாத தொகைக்கு வட்டி விதிக்கப்படுகிறது. அவ்வாறு செலுத்தப்பட வேண்டிய தொகை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.52,408 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டு இது ரூ,34,658 கோடியாக இருந்தது.
இதனால் மின் உற்பத்தி நிறு வனங்கள் பாதிப்பை சந்தித்து வந்தன. இந்நிலையில் அந்நிறு வனங்களுக்கு உத்திரவாதம் அளிக் கும் பொருட்டு, மின் விநியோக நிறுவனங்கள் இனி மின்சாரம் வாங்கும்போது உறுதிப்பத்திரம் அளிக்க வேண்டும் என்ற விதிமுறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பொதுத் துறை நிறுவனங்களான என்டிபிசிக்கு ரூ.9,922 கோடி, என்எல்சி-க்கு ரூ.5,096 கோடி, என்ஹெச்பிசி-க்கு ரூ.2,492 கோடி, டிஹெச்டிசி-க்கு ரூ.1,862 கோடி என்ற அளவில் மின் விநியோக நிறுவனங்கள் நிலுவை வைத்துள்ளன.