Published : 03 Nov 2019 07:33 AM
Last Updated : 03 Nov 2019 07:33 AM

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு

புதுடெல்லி

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. 2011-12 முதல் 2017-18 வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

2011-12 ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தமாக 47.4 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்று இருந் தனர். அந்த எண்ணிக்கை 2017-18 ஆண்டில் 46.5 கோடியாக குறைந் துள்ளது. இந்திய வரலாற்றில் இந்த அளவிலான வேலையிழப்பு ஏற்பட்டு இருப்பது இதுவே முதன் முறை என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 6 ஆண்டு காலகட்டத்தில் சராசரி யாக ஒவ்வொரு ஆண்டும் 26 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

2004-05 ஆண்டில் 45.9 கோடி நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று இருந்தனர். அந்த எண்ணிக்கை 2011-12 ஆண்டில் 47.4 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் 2017- 18-ல் 46.5 கோடியாக குறைந் துள்ளது. இந்த கால இடைவெளி யில் வேளாண் தொடர்புடைய துறை யில் வேலைவாய்ப்பு 49 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாகவும், உற் பத்தி துறையில் 12.6 சதவீதத்தில் இருந்து 12.1 சதவீதமாகவும் குறைந் துள்ளது. இந்த காலகட்டத்தில் உற்பத்தி துறையில் 35 லட்சம் அளவில் வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கட்டுமானத் துறையிலும் வேலைவாய்ப்பு கணிசமான அள வில் குறைந்துள்ளது. 2004-05 முதல் 2011-12 வரையிலான கால கட்டத்தில் ஆண்டுக்கு 40 லட்சம் வேலைவாய்ப்புகள் கட்டுமானத் துறையில் உருவாக்கப்பட்டன. ஆனால் 2011-12 முதல் 2017-18 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் அளவிலேயே அந்த துறையில் வேலைவாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு குறைவது மிக ஆபத்தா னது. அது நாட்டின் பொருளா தாரத்தை மிக மோசமான அளவில் பாதிக்கும் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உற் பத்தி துறையின் வளர்ச்சி மிக அவசியமானது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, ஏழ் மையை குறைக்க உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படுவது அவசியம். தவிர, இத் துறைகளின் மூலமே நாட்டின் உள் நாட்டு உற்பத்தியை பெருக்க முடி யும் என்று அந்த ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.

இந்த கால இடைவெளியில் சேவை துறையில் மட்டும் ஓரளவில் வேலைவாய்ப்பு உருவாகி உள் ளது. ஆண்டுக்கு 30 லட்சம் வேலை வாய்ப்பு சேவைத் துறைகளில் உருவாகி உள்ளது. ஆனால் ஊதிய அளவிலும், பணிச் சூழல் அடிப்படையிலும் அவற்றின் தரம் மிக மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x