Published : 01 Nov 2019 09:27 PM
Last Updated : 01 Nov 2019 09:27 PM

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: சிஎம்ஐஇ தரவில் தகவல்

இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அக்டோபர் மாதத்தில் 8.5% அதிகரித்துள்ளது. இது 2016ம் ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும் என்று இந்தியப் பொருளாதாரத்திற்கான கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ) தெரிவித்துள்ள தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

சிஎம்ஐஇ தரவுகளின் படி நகர்ப்புற வேலையின்மை விகிதம் 8.9% , ஊரக வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.3%.

மாநிலங்களில் திரிபுரா மற்றும் ஹரியாணா மாநிலங்களில் மிக அதிகபட்சமாக 20%-க்கும் கூடுதலாக வேலையில்லாத் திண்ட்டாட்டம் உள்ளது. தமிழ்நாட்டில்தான் ஆகக்குறைந்த வேலையின்மை விகிதமாகும், அதாவது 1.1%. ராஜஸ்தானில் வேலையில்லாத் திண்டாட்டம் 2018-லிருந்து 2019-ல் இரட்டிப்பாகியுள்ளது.

சேவைத்துறையில் வேலை வாய்ப்பு 2011-12 மற்றும் 2017-18 இடையே 13.4% அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு விகிதம் 5.7% குறைந்துள்ளது.

உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகள் குறைவானதும், கட்டுமானத்துறையில் குறைவானதும் ‘பொருளாதாரத்துக்கு நல்ல செய்தியல்ல’ என்று India’s Employment Crisis' என்ற தலைப்பில் நீடித்த வேலைவாய்ப்புக்கான ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவித்துள்ளது.

-தி இந்து (ஆங்கிலம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x