மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து 3-வது மாதமாக அதிகரிப்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி


வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மானியமில்லாத கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து மூன்றாவது மாதமாக உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் சிலிண்டர் ஒன்றின் விலை 76 ரூபாய் அதிகரித்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சமையல் கேஸ் விலையை மாற்றி அமைத்துள்ளது.

வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் மானியம் அல்லாத 14.2 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை 76 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இதன் விலை அக்டோபர் மாதத்தில் 605 ரூபாயாக இருந்த நிலையில் ரூ.681.50 பைசாவாக அதிகரித்துள்ளது

அக்டோபர் மாதம் கொல்கத்தாவில் 630 ரூபாயாக இருந்தநிலையில் ரூ.706 ஆகவும், மும்பையில் அக்டோபர் மாதம் ரூ.574.51 பைசாவாக இருந்தது தற்போது ரூ.651 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

அக்டோபர் மாதத்தில் சென்னையில் 620 ரூபாயாக இருந்த மானியமில்லாத சிலிண்டர் விலை தற்போது ரூ.696 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்ததுள்ளது.

இதற்கு முன் அக்டோபர் மாதத்தில் சிலிண்டர் ஒன்றுக்கு 15 ரூபாயும், செப்டம்பர் மாதத்தில் ரூ.15.50 பைசாவும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து டெல்லியில் சிலிண்டர் ஒன்றின் விலை 107 ரூபாயும், மும்பையில் 105 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.

தற்போது குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த சிலிண்டருக்கு அதிகமாகத் தேவைப்பட்டால் சந்தை விலை கொடுத்து வாங்கிக்கொள்ள முடியும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in