Published : 31 Oct 2019 11:06 AM
Last Updated : 31 Oct 2019 11:06 AM

5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கில் தமிழகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்: தொழில் நுட்பத் துறை தலைவர்கள் கருத்து

சென்னை

தமிழகம் தொழில் நுட்பக் கட்டமைப் பில் முன்மாதிரி மாநிலமாக உரு வாகி வருகிறது. வரும் காலங்களில் பிளாக்செயின் தொழில் நுட்ப பயன்பாட்டில் தமிழகம் குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தும் என்று தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் சிஇஓ சந்தோஷ் கே மிஸ்ரா தெரிவித்தார்.

‘தற்போது உலகம் தொழில் நுட்பப் புரட்சியில் நான்காவது யுகத்தில் நுழைந்து இருக்கிறது. நீராவி இயந்திரம், மின்சாரம், கணினி யுகம் என பெருமாற்றத்துக்கு உள்ளான தொழில் யுகம் தற்போது மெஷின் லேர்னிங், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), பிளாக்செயின் என அடுத்த தொழில் நுட்ப கட்டத் துக்கு நகர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிர்வாகம் சார்ந்த செயல் பாடுகள் நவீன தொழில் நுட்பத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. அதனை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் வகையில், பிளாக்செயின் தொழில் நுட்பம் தொடர்பாக புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன’ என்று அவர் தெரிவித்தார்.

இந்திய தொழில்துறை கூட் டமைப்பு (சிஐஐ), அரசு உதவியுடன் ‘கனெக்ட்’ என்றொரு நிகழ்வை, 2001-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. சர்வதேச அளவிலான கருத்தரங்கம், தொழில் நிறுவனங் களின் அடுத்த கட்ட திட்டங்கள், உலகளாவிய தொழில் நுட்ப போக்குகள் என தொழில் நுட்பம் குறித்த மாபெரும் கண்காட்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வரு கிறது. இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி வரும் நவம்பர் 7 மற்றும் 8-ம் தேதி களில் சென்னை வர்த்தக மையத் தில் நடைபெற உள்ளது. அதுகுறித்த அறிமுக நிகழ்வு நேற்று சென்னை யில் நடைபெற்றது. கனெக்ட் 2019-ன் தலைவர் மற்றும் டிசிஎஸ் சென் னைப் பிரிவின் துணைத் தலைவர் சுரேஷ் ராமன், சாஃப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்குநர் சஞ்சய் தியாகி, எலக்ட்ரானிக்ஸ் கார்ப் ரேஷன் ஆஃப் தமிழ்நாட்டின் நிர்வாக இயக்குநர் எம்.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கனெக்ட் 2019-ன் தலைவர் சுரேஷ் ராமன் பேசுகையில், ‘கடந்த 18 ஆண்டுகளாக கனெக்ட் நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அளவில் பெரும் தொழில் நுட்ப கட்டமைப்பு கனெக்ட் மூலம் உரு வாகி வந்து உள்ளது. உலகளா விய தொழில் நுட்பங்களை தமிழ கத்துக்கு அறிமுகப்படுத்துதல், நிறுவனங்களுடனான கலந்துரை யாடல் என பல்வேறு முன்னெடுப் புடுகளை மேற்கொண்டு வரு கிறது.

இந்திய அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இலக்கு நிர்ணயித்துள்ளது. தொழில் நுட்பக் கட்டமைப்பு வழியே அந்த இலக்கை அடைவதை மையமாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான நிகழ்வு நடைபெற உள்ளது. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளன. இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தில் புதிய முதலீடுகள் உருவாக வாய்ப்புள்ளது. வேலை வாய்ப்பும் உயரும்’ என்று தெரிவித்தார்.

சாஃப்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் ஆஃப் இந்தியாவின் இயக்குநர் சஞ்சய் தியாகி கூறியபோது, தமிழகம் முதலீட்டுக்கு ஏற்ற மாநிலமாக திகழ்கிறது. இந்தியாவின் 5 டிரில்லியன் டாலர் இலக்கில் தமிழகத்தில் பங்களிப்பு பெருமளவில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய எல்காட் நிர் வாக இயக்குநர் எம்.விஜயகுமார், தமிழகம் தொழில் நுட்ப ரீதியாக புதிய சாத்தியத்தை நிகழ்த்தி வருவதாக கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x