Published : 31 Oct 2019 11:02 AM
Last Updated : 31 Oct 2019 11:02 AM

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் ஓசிஐ-களுக்கு அனுமதி

புதுடெல்லி

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (என் பிஎஸ்) வெளிநாட்டில் வசிக்கும் இந் திய மக்கள் (ஓசிஐ) பணம் செலுத்த லாம் என்று அரசு அறிவித்துள்ளது.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) இதற்கான அனு மதியை அளித்துள்ளது. ஓய் வூதியத் திட்டத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் சலுகைக்கு இணை யான சலுகை மற்றும் ஓய்வூதி யத்தில் அனுமதிக்கப்படும் தொகை ஆகியவற்றிலும் அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இத்தகவல் நிதி அமைச் சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி நிர்வாக சட்ட விதிகளுக்கு ஏற்ப வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்தலாம் என்று பொருளாதார விவகாரங்களுக்கான துறை தெரிவித்துள்ளது.

பிஎஃப்ஆர்டிஏ விதிமுறை களுக்கேற்ப வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஓய்வூதியத்துக்கான தங்களது பங்களிப்பை செலுத்த முடியும். அந்நியச் செலாவணி ஒழுங்குமுறை சட்ட விதிகளின்கீழ் இதற்கு அனுமதி அளிக்கப்படும்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு வரு மான வரி சட்டம் 80 சிசிடி (1பி) பிரி வின் கீழ் ரூ.50 ஆயிரமும், ரூ. 1.5 லட்சம் வரை 80 சிசிடி (1) பிரிவின்கீழ் வரி விலக்கு பெறலாம்.

இந்த ஆண்டு வெளியான பட் ஜெட் அறிவிப்பில் தேசிய ஓய் வூதிய திட்டத்தில் பெறப்படும் தொகைக்கு 40 சதவீதம் முதல் 60 சதவீதம் வரையிலான தொகைக்கு விதி 10 (12ஏ) பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். ஏற் கெனவே 40 சதவீத தொகையானது கட்டாயமாக வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

3.18 கோடி உறுப்பினர்கள்

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இரண்டு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு மற்றும் முறைசார் தொழில் துறை ஊழியர்கள் சேரலாம். மற் றொரு ஓய்வூதிய திட்டமானது முறை சாரா தொழில் துறையினருக்கானதாகும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் அக் டோபர் 26, 2019 வரையான காலத் தில் மொத்தம் 3.18 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் நிர்வகிக்கப்படும் தொகையின் மதிப்பு ரூ.3,79,758 கோடியாகும்.

ஏறக்குறைய 66 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள் என்பிஎஸ் திட்டத்தில் சேர்ந்துள்ள னர். தனியார் துறையிலிருந்து 19.2 லட்சம் பேர் சேர்ந்துள்ளனர். ஏறக்குறைய 6,812 நிறுவனங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன.

2009-ம் ஆண்டிலிருந்து அனைத்து நிறுவனங்களும் கட் டாயம் இந்த ஓய்வூதிய திட்டத் தில் இணையுமாறு அறிவுறுத்தப்பட் டது. 2015-ம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியர்களும் (என்ஆர்ஐ) இத்திட்டத்தில் சேர்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x