

புதுடெல்லி
நம் நாட்டில் உதவி தேவைப் படுவோர் அதிக அளவில் உள்ளனர். நிறுவனங்கள் அவர்களை கருத் தில் கொண்டு, தங்கள் சமூக பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் கூறியுள்ளார். நிறுவ னங்களின் சமூகப் பங்களிப்பை பாராட்டி விருது வழங்கும் விழா வில் கலந்து கொண்ட அவர், அனாதைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியவர்களுக்கு உதவிடும் வகையில் நிறுவனங்கள் தங்கள் செயல்திட்டங்களை வகுக்க வேண்டும். 2030-க்குள் அனைத்து அனாதைக் குழந்தைகளுக்கும் சிறப்புக் கவனம் கிடைத்திடும் வகையில் புதிய இலக்கை நிர்ணயித்துக் கொள்வோம் என்று வலியுறுத்தினார்.
நிறுவனங்களின் சமூகப் பங் களிப்பை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. குடி யரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய குடியரசுத் தலைவர், இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது டாடா, பிர்லா, பஜாஜ் போன்ற பெருநிறு வனக் குடும்பங்கள் செலுத்திய பங் களிப்புகள் பற்றியும், அதற்கான பாதையை மகாத்மா காந்தி உருவாக்கித் தந்தது பற்றியும் குறிப்பிட்டார். அதைதொடர்ந்து, அடுத்த ஆண்டு முதல் காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2-ம் தேதியில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது, தங்கள் லாபத்தில் குறிப்பிட்டத் தொகையை சமூக வளர்ச்சிக்காக செலவிட்டு வரும் நிறுவனங்கள் பாராட்டுக்குரியவை. சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு சமூக மேம்பாட்டுக்கு அவசியமானது. மகாராஷ்டிரா, குஜ ராத், டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. அதேபோல், பின் தங்கியுள்ள மாநிலங்களான சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட், பிஹார் போன்ற மாநிலங்களுக்கு நிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு சென்றடைய வேண்டும்.
வட கிழக்குப் பகுதியில் உள்ள எட்டு மாநிலங்களையும் நிறுவனங் கள் மறந்திட வேண்டாம். அம் மாநிலங்களுக்குத்தான் சிஎஸ் ஆர்-ன் தேவை அதிகமாக உள்ளது. அவர்களின் மேம்பாட்டுக்கு உத விடும் வகையில் நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.
நிறுவனங்கள் அதன் மூன்று ஆண்டு சராசரி லாபத்தில், இரண்டு சதவீதத்தை சமூக மேம்பாட்டுக்கு செலவிட வேண்டும் என்று 2014-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப் பட்டது. அதன்படி, நிறுவனங்கள் அவை சார்ந்த பகுதிகளின் வளர்ச் சிக்கு பங்காற்றி வருகின்றன. ஒவ் வொரு ஆண்டும் சராசரியாக ரூ.10,000 கோடி அளவில் சிஎஸ்ஆர் விதியின்கீழ் செலவிடப் படுகிறது. கடந்த ஆண்டில் ரூ.13,000 கோடி வரையில் சமூக மேம்பாட்டுக்கென்று செலவிடப் பட்டுள்ளது.
நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர் பேசியபோது, கல்வி, சுகாதாரம் ஆகியவை சிஎஸ்ஆர் முறையினால் குறிப்பிட்ட அளவில் மேம்பட்டு இருப்பதாக கூறினார். மேலும் நாட்டின் தண்ணீர் பற்றாக் குறையை தீர்க்கும் முயற்சியில் நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று கூறினார்.