

நியூயார்க்
உலகின் தலை சிறந்த தலைமைச் செயல் அதிகாரிகள் (சிஇஓ) பட்டியலில் 3 இந்திய வம்சா வளியைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ஹார்வர்டு பிசினஸ் ரெவ்யூ 100 சிறந்த நிர்வாகிகள் பட்டி யலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் உள்ளவர் களில் இந்தியர்கள் மூவர் இடம் பெற்றுள்ளனர்.
உலகின் சிறந்த நிர்வாகிகள் 2019-க்கான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
இதில் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான நிவிட்யா நிறுவனத் தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹூயாங் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் அடோப் நிறு வனத்தின் தலைமைச் செயல் அதி காரி சாந்தனு நாராயண் 6-வது இடத்தில் உள்ளார். 7-வது இடத் தில் மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் சிஇஓ அஜய் பாங்காவும், 9-வது இடத்தில் மைக்ரோசாஃப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளா உள்ளனர். இந்தப் பட்டியலில் மற்றொரு இந்திய வம்சாவளி சிஇஓவாக டிபிஎஸ் வங்கியின் பியூஷ் குப்தா 89-வத இடத்தில் உள்ளார். ஆப்பிள் சிஇஓ டிம் குக் இப்பட்டியலில் 62-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத் தக்கது.
நைக் நிறுவன சிஇஓ மார்க் பார்க்கர் (20), ஜேபி மார்கன் சேஸ் சிஇஓ ஜேம் டிமோன் (23), லாக் ஹீட் மார்ட்டின் சிஇஓ மேரிலின் ஹியூஸன் (37), டிஸ்னி சிஇஓ ராபர்ட் இகெர் (55), சாஃப்ட் வங்கி தலைவர் மஸாயோஷி சன் (96)-வது இடத்தில் உள்ளனர்.
நிறுவனத் தலைவர்களை மதிப் பீடு செய்வதில் அந்தந்த நிறுவனங் களின் நிதி நிலையை மட்டுமின்றி சுற்றுச் சூழல் மற்றும் ஒட்டுமொத்த நிர்வாகத் திறன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2014-ம் ஆண்டிலிருந்து இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத் தில் இருந்துவந்த அமேசான் நிறு வனத் தலைவர் ஜெஃப் பிஸோஸ் இந்த ஆண்டு முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளத் தவறினார்.
நிறுவன பங்குதாரர்களுக்கு கிடைத்த வருமானம் (ஈவுத் தொகை), நிறுவனத்தின் சந்தை மதிப்பு உள்ளிட்டவையும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.