

மும்பை பங்குச்சந்தையில் சிறிய நிறுவனங்கள் பட்டியலிடு வதற்காக கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எம்.இ. எக்ஸ்சேஞ்ச் உருவாக்கப்பட்டது. நேற்று அந்த புதிய பங்குச்சந்தையில் 100 நிறுவனங்கள் பட்டியலிடப் பட்டன. நேற்று மட்டும் ஐந்து புதிய நிறுவனங்கள் பட்டியலிடப் பட்டன.
இதுவரை 104 நிறுவனங்கள் எஸ்எம்இ பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் ஆறு நிறுவனங்கள் எஸ்.எம்.இ பிரிவில் இருந்து முக்கிய குறியீடுக்கு மாறி உள்ளன. இந்த பங்குச்சந்தையில் மூலம் 756 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட் டிருக்கிறது.
நேற்று புதிதாக பட்டியலிடப்பட்டுள்ள ஐந்து நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் குஜராத்தை சேர்ந்தவையாகும். ஒரு நிறுவனம் கர்நாடகாவில் செயல்படும் நிறுவனமாகும்.
இதுமட்டுமல்லாமல் எஸ்.எம்இ பிரிவில் பட்டியலிடப்பட் டிருக்கும் நிறுவனங்களில் 40க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் குஜராத்தில் செயல்படு பவைதான்.
இந்த நிறுவனங்கள் தவிர இன்னும் ஆயிரக்கணக்கான தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன என்று பிஎஸ்இயின் நிர்வாக இயக்குநர் ஆஷிஷ் சவுகான் தெரிவித்தார்.
தவிர இன்னும் 2-3 மாதங் களில் 20 முதல் 25 நிறுவனங்கள் வரை எஸ்எம்இ பிரிவில் பட்டியலிடப்படும். நடப்பு நிதி ஆண்டில் சுமார் 100 நிறுவனங்கள் வரை எஸ்.எம்.இ பிரிவில் பட்டி யலிடப்படும் என்றார்.
இந்தியாவின் பலருக்கு இந்த நிறுவனங்கள் மூலமே வேலை கிடைக்கின்றது. தவிர மேக் இன் இந்தியாவில் இதுபோல சிறு நிறுவனங்களின் பங்கு முக்கியமானது என்று செபியின் முழு நேர உறுப்பினர் ராஜிவ் குமார் அகர்வால் தெரிவித்தார்.