

மும்பை
இந்திய சந்தையில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கூடுதலாக 4,500 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக அமேசான் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியாவில் பெரிய அளவில் வர்த்தகம் செய்து வருகிறது.
தீபாவளி பண்டிகையையொட்டி அமேசான் தனது விற்பனையை அதிகரிக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
தனது விநியோக சங்கிலியைப் பலப்படுத்தியதுடன், ஹைதரபாத், சென்னை என அடுத்தடுத்து பல இடங்ளகில் சேமிப்பு கிடங்குகளையும் அமைத்துள்ளது. அமேசான் தளத்தில் 2019-ம் ஆண்டில் 1.5 லட்சம் புதிய விற்பனையாளர்கள் இணைந்துள்ளனர். தீபாவளி சீசனை தொடர்ந்து இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுமட்டுமினறி, வீடியோ வெளியீடு, உணவு விற்பனை என பல துறைகளிலும் அமேசான் கால் பதித்து வருகிறது. இந்திய சந்தையில் வாய்ப்புகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் அதிகம் முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. கூடுதலாக 4,500 கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக அமேசான் தெரிவித்துள்ளது. இந்திய கம்பெனிகள் பதிவாளரிடம் அளித்துள்ள தகவலில் இதனை தெரிவித்துள்ளது.