பிளிப்கார்ட் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.3,836 கோடி

பிளிப்கார்ட் நிறுவனத்தின் நஷ்டம் ரூ.3,836 கோடி
Updated on
1 min read

பெங்களூரு

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் நஷ்டம் 86 சதவீதம் அதிகரித்து ரூ. 3,836 கோடியாக உயர்ந்துள்ளது.

2019-ம் நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் வருமானம் 43 சதவீதம் அதிகரித்து ரூ. 30,931 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு (2018) ஜூலை 18-ம் தேதி நடந்த ஆண்டு இயக்குநர் கூட்டத்தில் நிறுவனத்தின் நிதிநிலை விவரம் பரிசீலிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முந்தைய முதலீட்டாளர்களான ஆக்ஸெல் இந்தியா வெஞ்சர்ஸ் -2 (மொரீஷியஸ்) லிமிடெட், ஆக்ஸெல் குரோத் எப்ஐஐ (மொரீஷியஸ்) லிமிடெட், டைகர் குளோபல் இன்டர்நேஷனல் 2 ஹோல்டிங்ஸ் மற்றும் பிராதன நிறுவனமான பிளிப்கார்ட் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட பழைய உரிமைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டது. அந்நிறுவனங்கள் மேற்கொண்டிருந்த முதலீடுகளுக்கு ஏற்ற வகையில் அவற்றுக்கான பங்குகள் உள்ளிட்டவற்றை அளிப்பது குறித்தும் இதில் பரிசீலிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி அமெரிக்காவைச் சேர்ந்த வால்மார்ட் இன் கார்ப்பரேஷன் இந்நிறுவனத்தை வாங்கியது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த பிற நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் தற்போது வால்மார்ட் வசம் சென்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in