வணிக நூலகம்: தலைமை பண்புகளும் பயிற்சி உத்திகளும்

வணிக நூலகம்: தலைமை பண்புகளும் பயிற்சி உத்திகளும்
Updated on
3 min read

பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பது என்பது நிறுவனங்களில் மிகவும் இன்றியமையாத மற்றும் தவிர்க்கக் கூடாத ஒரு செயலாகும். பயிற்சி என்பதை ஏதோ தேர்வுக்காகவோ அல்லது தொழில்நுட்ப சிறப்புக்காகவோ கொடுப்பது என்று எண்ணக் கூடாது.

ஏன் பயிற்சி அளிக்க வேண்டும். பணியாளர்களுக்கு சுய அதிகாரமும், சுதந்திரமாக பணியாற்றும் உரிமைகளும் கொடுக்கும் பொழுது அவர்கள் நிறுவனத்திற்காக மிகவும் பாடுபட்டு உழைப்பார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் இது நேர்வதில்லை. உதாரணமாக ஒரு விளக்கைத் தூண்டுவதற்கு ஒரு சிறு குச்சி உதவுவது போல முறையான மற்றும் சரியான வெளிப்பாடே நாம் ஆய்வு செய்து கொண்டிருக்கும் பயிற்சி ஆகும்.

விலை உயர்ந்த விளையாட்டு போட்டிகளில் பங்குபெறும் காரும், பல வருடங்கள் உபயோகித்து துருப்பிடித்த காரும் திறமையாக செயல்பட முடியும். எப்படி என்றால், முறையான பராமரிப்பு மூலம் இரு வகையான வாகனங்களும் அதிக நாட்கள் நீடித்து நல்ல முறையில் செயல்படும். அதே போல பணியாளர் பயிற்சி என்பது தலைமைப் பண்பில் உள்ள நிறுவன மேலாளர்கள் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களைப் பராமரிக்க வேண்டும். அதற்காக அந்த பயிற்சியாளர் அனைத்து தொழில்நுட்ப மற்றும் பொறியியல் வல்லுநராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மாறாக மற்றவர்களுக்கு உதவக்கூடிய, மற்றவர்களை மாற்றக்கூடிய மனப்பாங்கு இருந்தால் அதுவே தேவைக்கு அதிகமானது ஆகும்.

பயிற்சி ஒரு கண்ணோட்டம்

விளையாட்டில் உலகளவில் சாதனை புரிந்த வீரர்கள் ஒரு சாதாரண பயிற்சி யாளரின் முறையான பயிற்சி மூலம் வெற்றியின் சிகரத்தில் நிற்கிறார்கள். அதே போல சாதனை பல புரியும் பணி யாளருக்கு தேவையானது விளக்கை தூண்டும் ஒரு சாதாரண குச்சியோ, மோட்டர் சைக்களின் பின் சக்கரத்தை இணைக்கும் சிறிய கம்பியோ போன்ற முறையான சீரிய பயிற்சியாளரே ஆகும்.

ஏன் பயிற்சி

ஒரு வெற்றி பெற்ற மேலாளர் கூறியதைப் போல “எல்லா விடைகளும் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், சரியான கேள்விகளை கேட்பதற்கு தெரிந்திருக்க வேண்டும்” தலைமை பண்புகளின் முதிர்ச்சியும், நம்பிக்கையும் ஒரு சரியான பயிற்சியாளரை அடையாளம் காட்டும். ஆயினும் பயிற்சியின் பலனை பலரும் பெறுவதில்லை. பயிற்சி என்பது மேல் மட்ட அதிகாரிகள் மீது செய்யப் படும் முதலீடாகவோ அல்லது அவர் களுக்கு வழங்கப்படும் பரிசாகவோ கருதப்படுகிறது. சரியாக பணியாற் றாதவர்களுக்கு அவர்கள் தங்களை சரிசெய்து கொள்ளும் விதமாக பயிற்சி அளிக்கப்படுவதாகவும் கூறப்படுவது உண்டு. உண்மையில் பயிற்சி என்பது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் ஒரு ஆக்கபூர்வமான உந்துதலாக இருக்க வேண்டுமே தவிர பயத்தை தூண்டுவதாக இருக்கக்கூடாது.

பயிற்சி அளிப்பது என்பது தலைமை பண்புகளை வளர்ப்பதற்குதான். அவ்வாறு தலைமை பண்புகளை எதிர்க்கொள்ள தயாராகும் மற்ற பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்கும் விதம் பற்றி முழுமையாக வெவ்வேறு வகையான அறிஞர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.

பயிற்சி வழிமுறைகள்

பயிற்சி அளிக்கும் உள்ளுணர்வுகள் பற்றி குறிப்பிடும் பொழுது தொடர்ந்து நிகழ்வுகளை கண்காணித்தல் பயிற்சிக் கான தொடர் நேரம் ஒதுக்குதல் ஆகியன முக்கியமான காரணிகளாக குறிப்பிடப் பட்டுள்ளன. வெவ்வேறு வகையான கோணங்களையும், வெவ்வேறு வகை யான உத்திகளையும் பதினைந்து அறிஞர்கள் தெளிவான எடுத்துக்கூறி யுள்ளனர். மிக முக்கியமாக தனி நபர் வேறுபாடு என்பது மிக முக்கியமான ஒரு அம்சமாக கருதப்பட்டாலும் அவ்வகையாக வேறுபாடுகளை முறையான பயிற்சி மூலம் களைவதற்கு வழிகள் கூறப்பட்டுள்ளன.

பயிற்சி உத்திகள்

இந்த பயிற்சிகள் தொடக்க நிலையில் உள்ள பணியாளர்களுக்கு தொழில்நுட்பங்களை கற்றுத்தரும் பயிற்சி அல்ல. மாறாக மிக முக்கியமாக தலைமை பண்புகளுக்கு தயாராக்கும் பயிற்சியாக கூறப்பட்டுள்ளது.

பயிற்சியின் பொழுது நாமும் கற்றுக்கொள்கின்றோம் என்ற மனப்பாங்கு தேவை. மாறாக எல்லாம் தெரியும், தெரிந்தவைகளை மட்டும் மற்றவர்களுக்கு கூற வேண்டும் என்ற கருத்தை தள்ள வேண்டும்.

பயிற்சிகள் செய்முறையுடன் கூடிய தெளிவான, உறுதியான மேலதிக திறமைகளின் வெளிப்படையாக வெளிவரும் வண்ணம் அமைந்திருக்க வேண்டும்.

பயிற்சியாளர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு சரியான கருத்துக் கூறலை அளிக்க முடியும்.

கேள்விகளை எழுப்பி இலக்குகளை பற்றிய எண்ணங்களை எடுத்துச்சொல்லி சவால்களை எதிர்கொள்ளும் பாங்கை பயிற்றுவிக்க வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சி நிகழ்வின் முடிவிலும் அவைகளை சரிவரச் செய்தோமா என்ற கண்காணிப்பும், தேவை ஏற்படும் இடங்களில் மாறுதலையையும் கொண்டு வருவது அவசியம்.

கருத்து மோதல்களும், விட்டு விலகும் பாங்கும் தவிர்த்து முறையான சரியான கருத்து கூறல் மூலம் பயிற்சி மேம்பாட்டுக்கு உதவ வேண்டும்.

எந்த எந்த துறைகளில் யார் யார் சிறந்திருக்கிறார்களோ, அந்த திறைமை சாலிகளை பயிற்சியில் ஈடுபடுத்தி பயிற்சியாளர்கள் பயன்பெறும் வாய்ப்பை பலப்படுத்த வேண்டும்.

நேர மேலாண்மையும் சரியான பழக்க வழக்கங்களையும் முறையாக எடுத்து சொல்லுதல் நேர சேமிப்பு ஈட்ட உதவும்.

கட்டி கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த பேச்சும் அல்லாமல் பயிற்சி பெறுபவர்கள் சுயமாக சிந்திக்கும் வழி முறைகளை எடுத்துக் கூற வேண்டும்.

தன்னை போலவே அனைவரும் இருக்க வேண்டும் என்ற தவறான கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும் பொறுமை இழத்தல் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக ஒவ்வொருவரையும் முறையாக பயிற்றுவிக்கலாம் என்ற நம்பிக்கை தேவை.

கற்றல் முறைகளும், திறமைகளும் வேறுபடும். கற்றல் திறமைகளை முழுமையாக அறிந்து சரியான வழிக்காட்டுதல் மூலம் பயிற்சி பெறுபவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

பயிற்சியின் போது சிலர் வேகமாகவும், சிலர் நிதானமாகவும், சிலர் மிகவும் முயன்றும் கற்க முயல்வார்கள். அப்போது அவரவருக்கு தகுந்த வேகத்திலும், விஷயங்களை பகிர்ந்து கொள்வதிலும் கவனம் தேவை.

பணி ஒப்படைப்பு பற்றியும் கருத்து பரிமாறல் பற்றியும் புதிதாக பயிற்சியில் ஈடுபடும் பயிற்சியாளருக்கு எடுத்து சொல்வதன் மூலம் சாதகமான, ஆக்கப் பூர்வமான, நேர்மறையான கருத்து கூறல் முறைகளை எடுத்துக் கூற வேண்டும்.

பயிற்சிக்கு பின்பு சிறிது காலம் கற்றல் முறைகளை உள்வாங்குவது அவசியம். எனவே பயிற்சி கொடுத்தவுடன் சிறப்பாக பணியாற்றுவார்கள் என்ற கருதுகோளை மாற்றி பயிற்சிக்கு பின்பு அவர்கள் உள்வாங்கிய கருத்துக்களை புடம் போட்டு சரியான முறையில் வெளிக்கொணர்தல் அவசியம். மிக முக்கியமாக உணர்வுபூர்வமான வளர்ச்சி தேவை.

பயிற்சியின் பொழுது எந்த இடத்தில், எந்த நேரத்தில், எந்த வகையில், எந்த முறையில் இடையில் குறுக்கிடலாம் என்பது பயிற்சியாளர்கள் முக்கியமாக கற்றுத்தேர வேண்டிய பயிற்சி ஆகும்.

மேலே கூறிய 15 வகையான பயிற்சி முறைகள் பணியாளர்களை பணியாளர்களாகவே இல்லாமல், தலைமை பண்புகளை ஏற்றுக்கொள் ளும் பக்குவத்திற்கு மாற்ற உதவும் காரணிகள் ஆகும். வளர்ச்சி காணும் பணியாளர்களுக்கும், வளர்ச்சிக்கு பணியாளர்களைத் தயார் செய்யும் மேலாளர்களுக்கும் இந்த புத்தகம் மிகவும் பயன் உள்ள ஒன்றாகும்.

rvenkatapathy@rediffmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in