Published : 24 Oct 2019 11:19 AM
Last Updated : 24 Oct 2019 11:19 AM

எண்ணெய் நிறுவனங்கள் அல்லாதவற்றுக்கும் பெட்ரோல் பங்க் வைக்க அனுமதி

கோப்புப்படம்

புதுடெல்லி

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட துறையில் போட்டியை அதிகரிக்கும் பொருட்டு எண்ணெய் நிறுவனங்கள் அல்லாத நிறுவனங்களுக்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வைக்க அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், முதலீடுகளும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். தற்போது ஒரு நிறுவனம் எண்ணெய் விற்பனை நிலையம் அமைக்க, ஹைட்ரோகார்பன் கண்டுபிடிப்பு, உற்பத்தி, சுத்திகரிப்பு உள்ளிட்டவற்றிலோ அல்லது இயற்கை எரிவாயு உற்பத்தியிலோ ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால், இந்த விதிமுறைகளை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு மாற்றியமைத்துள்ளது. அதன்படி ரூ.250 கோடி ஆண்டு விற்பனை உள்ள நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்களை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், 5 சதவீத நிலையங்களை கிராமப்புறங்களில் வைக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்றும் நாடு முழுவதும் 65 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை நிறுவியுள்ளன. இவைதவிர, ரிலையன்ஸ், நயரா எனர்ஜி, ஷெல் ஆகிய தனியார் நிறுவனங்களும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வைத்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x