

மும்பை
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்குகளில் முறைகேடுகள் நடந் திருப்பதாக எழுப்பப்பட்ட குற்றச் சாட்டுகளை நிறுவனம் மறைத்தது தொடர்பாக மும்பைப் பங்குச் சந்தை விளக்கம் கேட்டுள்ளது.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை அதிகாரிகள் முறைகே டான கணக்குகள் மூலமாக லாபத்தை அதிகரிக்கும் நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டு செப்டம்பர் 30-ம் தேதி எழுப்பப்பட்டுள்ளது. இதுபோக இன்னும் சில குற்றச்சாட்டுகள் முன்பே எழுந்துள்ளதாகவும் இன்ஃபோசிஸ் நிறுவன தலைவர் நந்தன் நீலகேனி தெரிவித்துள்ளார். ஆனால், அக்டோபர் 11-ம் தேதி நிறுவனத்தின் 2-ம் காலாண்டு அறிக்கையை வெளியிடும்போது இந்தக் குற்றச்சாட்டுகளை அறிக் கையில் குறிப்பிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் செப்டம்பர் 20-ம் தேதியிட்ட கடிதத்தில் நிறுவன ஊழியர்கள் சிலர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சலில் பாரிக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் இருவரும் நிறுவனத்தின் கணக்கு சார்ந்து பெரிய அளவி லான முறைகேடுகளில் ஈடுபட்டி ருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் வெளி வந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்கின் விலை கடந்த செவ்வாய் அன்று 16 சதவீதம் வீழ்ச்சி கண்டு, அதன் சந்தை மதிப் பில் ரூ.53,450 கோடி காணாமல் போனது.
இந்நிலையில், இந்தக் குற்றச் சாட்டுகளை செபியின் சந்தை விதிமுறைகளின்படி இன்ஃபோ சிஸ் நிறுவனம் ஏன் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை என பிஎஸ்இ விளக்கம் கேட்டுள்ளது.