Published : 24 Oct 2019 11:10 AM
Last Updated : 24 Oct 2019 11:10 AM

சீனா - அமெரிக்கா வர்த்தகப் போர் இந்தியாவுக்கு எந்த பலனையும் அளிக்காது

புதுடெல்லி

தற்போது சீனா - அமெரிக்கா இடையே வர்த்தகப் போர் நிலவி வருகிற நிலையில், பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் சீனா வைத் தவிர்த்து வேறு நாடுகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பை தேடி வருகின்றன. ஆனால், அந்நிறு வனங்களின் தேர்வாக இந்தியா இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று இஐயூ என்றழைக்கப்படும் பொருளாதார நிபுணர்கள் அமைப் பின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாகவே வர்த் தகப் போர் நிலவி வருகிறது. அமெ ரிக்கப் பொருட்களுக்கு சீனாவும், சீனப் பொருட்களுக்கு அமெரிக் காவும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. இதனால் சீனாவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங் கள், சீனா தவிர்த்து முதலீடு செய்வதற்காக வேறு நாடுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், இந்த வர்த்தகப் போர்ச் சூழல் இந்தியா வுக்கு சிறந்த வாய்ப்பாக அமை யும் என்றும், இந்தியா இதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்தியா அந்நிறுவனங்களின் தேர்வாக இருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று இஐயூ-வின் ஆய்வாளர் சர்தக் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொழில் தொடங்கு வதற்காக நிலம் கையகப்படுத்து வதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. அதேபோல் கடுமையான தொழிலாளர் விதிகள், உற்பத்தி தொடர்பான கட்டுப்பாடுகள் என தொழில் கொள்கை சார்ந்து பல் வேறு தடைகள் உள்ளன. இதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியா வில் முதலீடு செய்ய அவ்வளவு எளிதில் முன்வராது என்று அவர் கூறினார்.

சமீபத்தில் இந்திய அரசு, நிறு வனங்களுக்கான நிறுவன வரியை 10 சதவீதம் அளவில் குறைத்தது. இருந்தும் இன்னும் தொழில் தொடங்குவது தொடர்பாக பல் வேறு கட்டுப்பாடுகள் இந்தியாவில் இருக்கவே செய்கின்றன. இதன் விளைவாக சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவெடுப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாறாக தென் கிழக்கு ஆசிய நாடுகளான வியட்நாம், தாய்லாந்து போன்றவை முதலீட்டுக்கு ஏற்ற நாடாக மாறி வருகின்றன. சீனாவி லிருந்து வெளியேற விரும்பும் நிறுவனங்களின் முதன்மை தேர் வாக இந்த நாடுகளே உள்ளன. பிரேசில், கிழக்கு ஆப்ரிக்கா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் முதலீட்டுக்கு ஏற்ற நாடாக விளங்குகின்றன. அதற்கேற்ற வகையில் தொழில்சார் கட்டுப்பாடுகளை இந்நாடுகள் தளர்த்தி இருக்கின்றன.

உலக வங்கி சமீபத்தில் வெளி யிட்ட தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருந்தா லும், பெரும் நிறுவனங்கள் நிலங் களை கையகப்படுத்துவது தொடர் பாக பல நடைமுறைச் சிக்கல்கள் இன்னும் இருக்கின்றன. அனுமதி வாங்குவது உட்பட பல விதிமுறைகள் காலதாமதத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

தற்போது இந்தியா மிக மோச மான பொருளாதார நெருக்கடியை சந்தித்து உள்ளது. முதலீடுகள் பெருமளவில் குறைந்துள்ளன. தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர, அந்நிய முதலீடுகளை கொண்டு வர வேண் டிய கட்டாயத்தில் இந்தியா உள் ளது. சமீபத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவுக்கு மாற்றாக இந்தியாவை உரு வாக்க இருப்பதாக தெரிவித்தார்.

ஆனால், தொழில் தொடங்கு வது தொடர்பாக இந்தியாவின் நடை முறை விதிகள் சிக்கலாக இருக்கின்றன. மட்டுமல்லாமல், பிற ஆசிய நாடுகள் முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை எளிமையாக்கி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில், சீனா - அமெரிக்கா வர்த்தகப் போரால் இந்தியா பயன் பெற வாய்ப் பில்லை என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x