Published : 22 Oct 2019 11:08 AM
Last Updated : 22 Oct 2019 11:08 AM

திறமையான ஊழியர்களின் ராஜினாமாவை தடுக்க 5,000 பணியாளர்களுக்கு பதவி உயர்வு: விப்ரோ டெக்னாலஜிஸ் நடவடிக்கை

பெங்களூரு

திறமையான பணியாளர்கள் நிறு வனத்திலிருந்து வெளியேறு வதைத் தவிர்க்கும் பொருட்டு பதவி உயர்வு வழங்கி அவர்களை தக்க வைத்துக் கொள்ளும் நடவடிக் கையில் விப்ரோ இறங்கியுள்ளது.

இதன்படி நிறுவனத்தில் பணிக் குச் சேர்ந்து 5 ஆண்டு முதல் 8 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள வர்களுக்கு பதவி உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு டிசம்பர் மாதத் திலிருந்து நடைமுறைப்படுத்தப் படும் என்று நிறுவனம் தெரி வித்துள்ளது.

இதன்படி குறைந்தபட்சம் 5 ஆயி ரம் பேருக்கு மேல் பதவி உயர்வு பெறுவார்கள் என்று நிறுவனத் தின் மனிதவள மேம்பாட்டுப் பிரி வின் தலைவர் சவுரப் கோவில் தெரி வித்துள்ளார். 2000-வது ஆண்டுகளில் திறமை வாய்ந்த இளம் கம்ப்யூட்டர் வல்லுநர் களுக்கு பெரும் தட்டுப்பாடு நில வியது. அதுபோன்ற சூழல் தற் போது உருவாகியுள்ளது. இதனால் திறமையானவர்களை தக்க வைத்துக் கொள்ள ஊதிய உயர்வோடு பதவி உயர்வையும் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

தற்போது தகவல் தொழில் நுட்பத் துறையில் மிகப் பெரும் மாறுதல் உருவாகியுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை தொழில்நுட்பம் (ஏஐ) ஆகியவற்றை புகுத்தும் போக்கு அதிகரித்துள்ளது.

விப்ரோ நிறுவனம் ஏற்கெனவே கல்லூரிகளிலிருந்து பட்டப் படிப்பை முடித்தவர்களை தேர்வு செய்து நிலுவையில் வைத்துள்ளது. அவர்களில் வேறு நிறுவனங்களில் ஓராண்டாக பணியில் சேராமலிருந்த வர்களுக்கு ரூ.1 லட்ச ரூபாய் போனஸாக அளித்துள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் திறமையான பணியாளர்கள் வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக தற்போது இதே நிலை விப்ரோவில் உருவாகியுள்ளது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் பதவி உயர்வு அளித்து அவர்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் விப்ரோ இறங்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x