

புதுடெல்லி
நிதி நெருக்கடியில் உள்ள பொதுத் துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டை (பிஎஸ்என்எல்) சீரமைக்கும் திட்டம் விரைவில் வெளியாகும் என்று நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு நர் ஆர்.கே. புர்வார் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4 ஜி அலைக்கற்றை வசதி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிறுவனத்தின் பணியாளர் களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பாக ஊதியம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இம் மாதம் 23 மற்றும் 24-ம் தேதிகளில் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.
நிறுவன சீரமைப்பு திட்டம் குறித்த விவரம் பொது அரங்கில் வெளியிடப்படும். அதாவது இணையத்தில் வெளியிடப்படும் என்று குறிப்பிட்டார்.
தொலைத் தொடர்புத் துறை யில் மிகுந்த போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தனியார் நிறு வனங்களின் கட்டண குறைப்பு நடவ டிக்கையால் பிஎஸ்என்எல் நிறு வனம் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளது. இது தவிர 4 ஜி அலைக்கற்றை வசதி இந்நிறுவனத்துக்குக் கிடைக்கவில்லை. இதனால் கடுமையான நிதி நெருக்கடிக்கு இந்நிறுவனம் உள்ளாகியுள்ளது. இதை சீரமைக்கும் திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அது இன்னும் ஓரிரு வாரங்களில் தயாராகிவிடும் என்றும் ஒரு மாதத்துக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.
நஷ்டத்தில் இயங்கிவரும் பிஎஸ்என்எல் நிறுவனம் 2015-ம் ஆண்டிலேயே 4ஜி அலைக்கற்றை கோரி விண்ணப்பித்திருந்தது. அத் துடன் இந்நிறுவன பணியாளர்களின் தாமாக ஓய்வு பெறும் திட்டம் (விஆர்எஸ்) 2009-ம் ஆண்டிலிருந்து கிடப்பில் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிறுவனத்தின் சீரமைப்பு திட் டத்துக்கு ரூ.74 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதை அரசு வழங்கும் என்றும், இத்தொகை யானது நிறுவனத்துக்கு சொந் தமான சொத்துகளை விற்பதன் மூலம் மீண்டும் அரசுக்கு கிடைக் கும் வகையில் திட்டம் வகுக்கப் படுகிறது.
நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய நிலுவை வழங்க ரூ. 1,200 கோடி நிதி தேவைப்படுகிறது. இந்த நிதி யானது உள் ஆதாரங்கள் மூலம் திரட்டப்படுகிறது. நிறுவனத்தின் மாத வருமானம் ரூ. 1,600 கோடி யாகும். மாதம் ரூ. 400 கோடி முதல் ரூ.500 கோடி வரை பல்வேறு இனங் களுக்காக செலவிடப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த ஆண்டு இறுதிக்குள் 4 ஜி அலைக்கற்றை வசதி கிடைக்கும்.
தரைவழி தொலைபேசி இணைப்புகளில் இன்னமும் பிஎஸ் என்எல் நிறுவனத்துக்கு நம்பகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். நிறு வனம் 8 லட்சம் கிலோமீட்டர் அளவுக்கு கண்ணாடியிழை கேபிள் களை (ஓஎப்சி) நிறுவியுள்ளது. அத்துடன் 2.5 கோடி வீடுகளுக்கு இணையதள வசதி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.