

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில் பழைய கார்களின் செயல்பாடுகளை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி பழைய கார்களைக் கைவிட்டு புதிய கார்கள் வாங்குவோருக்கு ஊக்கத் தொகை அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் பல கார்களைப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் போல ஒரே காரை அனைவரும் சிறப்பாக பயன்படுத்துவது எப்படி என்று திட்டமிட வேண்டும் என்றார்.
புதிதாக வெளிவரவுள்ள கொள்கையில் பழைய கார்களைக் கைவிட்டு புதிய கார்களை வாங்கு வோருக்கு ஊக்கத் தொகை அளிப் பது குறித்த அறிவிப்பு இருக்கும் என்றார். இதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் கிடைக்கும் என்றார்.
பழைய கார்களை அளிப்பவர் களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப் படும். இந்த கார்களை மறு சுழற் சிக்கு அனுப்பப்படும். ஒரு புதிய கார் விற்பனை மூலம் அரசுக்கு ரூ. 95 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்ப தாக அவர் கூறினார். பழைய கார்களை விற்பனை செய்வதை அரசு ஊக்குவிக்கும் என்றார்.
நாட்டின் வாகன உற்பத்திக்கு ஈடு கொடுக்கும் வகையில் சாலை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படவில்லை என்பதை ஒப்புக் கொண்ட அவர், பழைய வாகனங்களின் பயன்பாடுகளை முற்றிலுமாக ஒழிப்பதன் மூலம் வாகன நெரிசலை ஓரளவு குறைக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
குடும்பக்கட்டுப்பாட்டு திட்டத் தைப் போல வாகனத்தைப் பயன் படுத்துவதிலும் திட்டமிடுதல் அவசியம். வாகனங்கள் பெருகும் அளவுக்கு சாலை வசதிகள் அதி கரிக்கவில்லை. எனவே இந்த சூழலை ஏதாவது ஒரு வகையில் சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுவதாக கட்கரி கூறினார்.