

புதுடெல்லி
ஹெச்டிஎஃப்சி வங்கி செப்டம்பர் மாதம் முடிந்த நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.6,345 கோடி லாபம் ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டைவிட இது 27 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற ஆண்டு இதே காலத்தில் இந்த வங்கி ரூ.5,005 கோடி லாபம் ஈட்டியது. அதேபோல், வங்கியின் வட்டி வருவாய் இரண்டாம் காலாண்டில் 15 சதவீதம் உயர்ந்து ரூ.13,515 கோடியாக உள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் அதன் வட்டி வருவாய் ரூ.11,763 கோடியாக இருந்தது.