Published : 21 Oct 2019 06:38 AM
Last Updated : 21 Oct 2019 06:38 AM

நடப்பு நிதி ஆண்டின் 6 மாதங்களில் இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி 4 சதவீதம் உயர்வு

புதுடெல்லி

நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான கால கட்டத்தில் இருசக்கர வாகனங் களின் ஏற்றுமதி 4 சதவீத அளவில் உயர்ந்துள்ளது. இந்த காலகட்டத் தில் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடு களுக்கு குறிப்பிடத்தக்க அளவில் இரு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி யாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.

பைக், ஸ்கூட்டர், மொபட் போன்ற இருசக்கர வாகனங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையி லான காலகட்டத்தில் 17,93,957 அளவில் ஏற்றுமதியாகி உள்ளன. முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 17,23,280-ஆக இருந்தது.

ஆனால், தனிப்பட்ட முறையில் ஸ்கூட்டர்களின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைவிட 11 சதவீதம் அள வில் குறைந்து 2,01,277 எண் ணிக்கையிலும், மொபட்களின் ஏற்றுமதி 44.41 சதவீதம் அளவில் குறைந்து 7,342 எண்ணிக்கையிலும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. ஒப்பீட்டளவில் பைக்குகளின் ஏற்று மதிதான் 7 சதவீதம் உயர்ந்துள் ளது.

இந்த காலகட்டத்தில் 15,85,338 எண்ணிக்கையில் பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

அதேசமயம் ஏப்ரல் முதல் செப் டம்பர் வரையிலான காலத்தில் இரு சக்கர வாகனங்களின் உள் நாட்டு விற்பனை 16 சதவீதம் அளவில் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு இதே காலத்தில் 1,15,68,498 இருசக்கர வாகனங்கள் விற்பனை யான நிலையில், இந்த ஆண்டு 96,96,733 என்ற அளவிலேயே விற்பனையாகி உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x