Published : 20 Oct 2019 10:13 AM
Last Updated : 20 Oct 2019 10:13 AM

நெசவாளர்களின் தோழன் கோ-ஆப்டெக்ஸ்

டி.என்.வெங்கடேஷ்

ஜெ. சரவணன்

“சுதந்திர போராட்ட காலத்தில் அந்நிய உடைகளை புறக்கணிக்க வும், உள்நாட்டு கைத்தறி தயாரிப்பு களை உடுத்தவும் பல தலைவர்கள் அறிவுறுத்தினர். ஆனால், நாளடை வில் தாராளமயமாக்கல் கொள்கை யால், அந்நிய நாட்டு தயாரிப்புகள் குவியும் சந்தையாகவே மாறியது நம் நாடு. ஆனாலும், இன்றும் பழ மையையும் பாராம்பரியத்தையும் விடாமல் தங்கள் தறிகளில் பிடித்துவைத்திருக்கிறார்கள் நம் கைத்தறி நெசவாளர்கள்.

அத்தகைய நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்று வதே கோ-ஆப்டெக்ஸின் நோக்க மாக இருக்கிறது” என்கிறார் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக உள்ள டி.என்.வெங்கடேஷ் ஐஏஎஸ். உண் மையில், அரசு நிறுவனம் என்றாலே மக்களுக்கு இருக்கும் பொதுவான பார்வையை முற்றிலும் மாற்றியிருக் கிறது கோ-ஆப்டெக்ஸ். கோ-ஆப்டெக்ஸ் கடைகளின் அமைப்பு, அங்குள்ள தயாரிப்புகளின் தரம், வாடிக்கையாளர் சேவை என எதிலும் எந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கும் சளைத்ததில்லை என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

“கைத்தறி நெசவாளர்கள் தங் களின் தயாரிப்புகளை பல தனியார் நிறுவனங்களின் போட்டிக்கு இடை யில் சந்தைப்படுத்துவது என்பது நடக்காத காரியம். அவர்களு டைய வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவே அரசு நிறுவன மான கோ-ஆப்டெக்ஸ் அவர்களை அரவணைத்திருக்கிறது. 1935-ல் தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் 28 கூட்டுறவு சங்கங்களுடன் தனது சேவையைத் தொடங்கியது.

இன்று தமிழகத்தில் 1400-க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் எங்களுடன் இணைந் துள்ளன. இதன் மூலம் 80 ஆயிரம் நெசவாளர்கள் பயனடைகின் றனர். அவர்களுடைய தயாரிப்பு களை நாங்கள் சந்தைப்படுத்தி வருகிறோம். விற்பனைக்குத் தேவையான அளவு கைத்தறி தயாரிப்புகளை நாங்கள் கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெற்றுக் கொள்கிறோம்.

கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்படும் ஆடைகளுக்கு உடனடியாகப் பணத்தை வழங்கி விடுகிறோம். ஏனெனில் ஒவ்வொரு நெசவாளரும் ஒரு தயாரிப்பை சில நாட்கள் பாடுபட்டு உருவாக்கு கிறார்கள். அவர்களுக்கு அன்றன் றைய கூலி கிடைத்தால்தான் அவர் களுடைய வாழ்க்கை நலமாக இருக்கும். நெசவாளர்களின் நல னுக்காக அரசு தரப்பிலிருந்து கடன் வசதிகள் வழங்கப்படு கின்றன.

மக்கள் கைத்தறி ஆடைகளை மிகவும் விரும்பி வாங்கிச் செல் கிறார்கள். மாடர்ன் உடைகள் வந்து விட்டாலும் பழமை மீது மக்களுக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு உண்டு. அதுவும் இப்போது கைத்தறி உடை கள் மீது இளைஞர்கள் அதிக ஆர்வமாக உள்ளனர். பட்டுப் புடவைகளைத் தாண்டி பருத்தி ஆடைகளுக்கு அதிக முக்கியத் துவம் தருகிறோம்.

100 சதவீத பருத்தி (காட்டன்) ஆடைகளை அணிவதற்கு எல் லோரும் விரும்புகிறார்கள். பலர் தலைமுறை தலைமுறையாக குடும்பமாக வந்து கோ-ஆப் டெக்ஸில் புடவைகளை வாங்கிச் செல்கிறார்கள். மக்களுக்கு ஏற்ப புதுவிதமான டிசைன்களையும், புதுவிதமான தயாரிப்புகளையும் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறோம். லிநன் புடவை, லிநன் சட்டை முதல் சில்க் காட்டன் புடவைகள் வரை பல ரகங்களை பல்வேறு வண்ணங் களில் தயார் செய்கிறோம்.

மேலும் இயற்கை முறையிலான சாயம் கொண்ட தயாரிப்புகளையும் கொண்டுவந்திருக்கிறோம். காலத் துக்கு ஏற்ப தயாரிப்புகளையும், சந்தைப்படுத்துதல் முறைகளையும் மாற்றிக்கொண்டே இருக்கிறோம். கோ-ஆப்டெக்ஸ் போய் புதிதாக என்ன இருக்கிறது என்று பார்ப்போம் என்றுதான் மக்களுக்கு தோன்ற வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். அதேபோல் விலையும் எல்லோருக்கும் ஏற்ற வகையில் இருக்கும்” என்றார்.

கைத்தறி தயாரிப்புகளைச் சந் தைப்படுத்தவும், நெசவாளர் களைத் தொடர்ந்து உற்சாகப் படுத்தவும் என்னென்ன உத்திகளை கோ-ஆப்டெக்ஸ் எடுத்துவருகிறது என்று கேட்டோம். நாடு முழுவதும் கோ-ஆப்டெக்ஸ் தனது பிரத் யேக விற்பனையகங்களை அமைத் துள்ளது. தனியார் நிறுவனங்கள் போல எங்களால் விளம்பரங் களுக்கு அதிக செலவு செய்ய முடியாது.

எங்களுடைய விளம்பரத்துக் கென்று ஒரு பட்ஜெட் இருக்கிறது. அதைத்தாண்டி எங்களால் செலவு செய்ய முடியாது. ஏற்கெனவே எந்த லாப நோக்கமும் இல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கும் நிறு வனம் என்பதால், வெளிநாடுகளில் கண்காட்சி நடத்துவது போன்றவை குறிப்பிடத்தக்க அளவில் பயன் தருகின்றன. கோ-ஆப்டெக்ஸ் ஆண்டு ரீடெய்ல் விற்பனை மட்டுமே ரூ.300 கோடிக்கும் மேல் உள்ளது. இதுதவிர ஏற்றுமதி, ஆன்லைன் விற்பனை ஆகியவற்றி லும் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறோம்.

மேலும் கைத்தறி நெசவாளர் களிடமிருந்து அரசு பள்ளி சீரு டைகள், மருத்துவமனைகளுக்கும், அரசு விடுதிகளில் மாணவர்களுக் கும் படுக்கை விரிப்புகள் உள் ளிட்ட பொருட்களை அரசு சார் பாக கொள்முதல் செய்து கொடுக் கிறோம். நெசவாளர்களுக்கு தொடர்ச்சியாக வேலை வாய்ப்பையும், வருமானம் ஈட்டும் வாய்ப்பையும் ஏற்படுத்தி தரு வதற்காகத் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறோம். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கண்காட்சிகள் நடத்துகிறோம். நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆனால், தற்போது அனுபவ மிக்க நெசவாளர்கள்தான் கைத்தறி துறையை உயிர்ப்புடன் வைத் திருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு இந்தத் துறையை வளர்த் தெடுக்க ஆட்கள் குறைவு என்பது வருத்தமான விஷயம். புதிய தலைமுறையினர் புதிய வேலை வாய்ப்புகளையும் உடனடியாக அதிக வருமானத்தையும் எதிர்பார்க் கிறார்கள்.

அதனால், கைத்தறி தொழிலுக்கு அவர்கள் முன்வரு வதில்லை. இதனால் தொடர்ச்சி யாக இந்தத் துறையை வளர்த் தெடுக்க ஆள் இல்லை என்பது மிகப் பெரிய சவால்தான்” என்று முடித் தார் வெங்கடேஷ். கோ-ஆப்டெக்ஸுடன் நாமும் சேர்ந்து கைத்தறி நெசவாளர்களுக்கு கைகொடுக்கலாமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x