Published : 20 Oct 2019 10:12 AM
Last Updated : 20 Oct 2019 10:12 AM

நிறுவன வரி குறைப்பு நடவடிக்கை இந்தியாவில் முதலீட்டு சூழலை உருவாக்க உதவும்: ஐஎம்எஃப் இயக்குநர் கருத்து

வாஷிங்டன்

மத்திய அரசு சமீபத்தில் மேற் கொண்ட நிறுவன வரி (கார்ப்பரேட் டாக்ஸ்) குறைப்பு நடவடிக்கைகள் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்று சர்வதேச செலாவணி நிதியத்தின் (ஐஎம்எஃப்) ஆசிய பசிபிக் பிராந் திய இயக்குநர் சாங்யோங் ரீ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிதிப்பற்றாக் குறை நிலை கட்டுக்குள் இருப்ப தாகக் கூறினாலும் அது ஓரளவே; இதனால் மிகுந்த எச்சரிக்கை தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். இருப்பினும் சமீபத்தில் இந்திய அரசு மேற்கொண்ட நிறுவன வரி குறைப்பு நடவடிக்கையை ஐஎம்எஃப் ஆதரிக்கிறது. இது முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியானது கடந்த இரண்டு காலாண்டுகளில் இறங்குமுகமாக உள்ளது. இருப்பினும் நடப்பு நிதி ஆண்டில் வளர்ச்சி விகிதம் 6.1 சதவீத அளவுக்கு இருக்கும் என்றும் இது 2020-ல் 7 சதவீதமாக உயரும் என்று குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நிதிக் கொள்கை நடவடிக்கைகள் மற்றும் நிறுவன வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் முதலீடுகளை ஈர்க்க உதவும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வங்கியல்லாத நிதி நிறுவனங் கள் (என்பிஎஃப்சி) எதிர்கொண் டுள்ள பிரச்சினைகளை இந்திய அரசு கவனத்தில் கொண்டு அதைத் தீர்க்க முயலவேண்டும் என்று துணை இயக்குநர் ஆன் மேரி கைட் உல்ஃப் கூறினார்.

இப்போதைக்கு லேசான முன் னேற்றம் தென்பட்டாலும் அரசின் நடவடிக்கைகள் தொடர வேண்டும். குறிப்பாக பொதுத் துறை வங்கி களின் நிதி நிலை மேம்பட அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றார். இருப்பினும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் பகுதியளவில் தீர்க்கப்படாமல் உள்ளன. அதையும் சரிவர கையாண்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார். இந்த விஷயத்தை அரசும் சரியாக புரிந்து கொண்டுள்ளது என்றார்.

இந்தியாவில் தற்போது நிதிப் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x