Published : 19 Oct 2019 08:51 AM
Last Updated : 19 Oct 2019 08:51 AM

செய்திகளின் உண்மைத் தன்மையை நாங்கள் சோதிப்பதில்லை: பேஸ்புக் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் தகவல்

சான் பிரான்சிஸ்கோ

வழமையான செய்தி ஊடகங் களுக்கு மாற்று சக்தியாக பேஸ்புக் உருவெடுத்துள்ளது என்று பேஸ் புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் கூறியுள்ளார்.

வழமையான செய்தி நிறுவனங்கள் அதிகார மையமாக செயல்பட்டு வந்தன. ஒரு சாமானிய தனி நபரின் குரலுக்கு அவை இடம் அளித்ததில்லை. பேஸ்புக்கின் வருகைக்குப் பிறகு இந்த அதிகார மையம் தகர்க்கப்பட்டு இருக்கிறது. அனைவரும் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் புதிய சாத்தி யத்தை உருவாக்கியுள்ளது. தற் போதைய ஜனநாயக காலத்தில் இவை மிக இன்றியமையாத மாற் றம் என்று அவர் தெரிவித்தார்.

பேஸ்புக்கில் வெளியிடப்படும் செய்திகள் போலியான தகவல் களை கொண்டிருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. குறிப்பாக அரசி யல் கட்சிகள் அதன் லாபங்களுக் காக பொய்யான தகவல்களை பேஸ்புக் விளம்பரங்கள் மூலம் பரப்பி வருகின்றன, அதற்கு பேஸ் புக்கும் உடந்தையாக இருப்ப தாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அவற்றை வெளிப்படுத்தும் சுதந்திரம் அவர் களுக்கு உண்டு. பொதுவாக பேஸ் புக்கில் வெளியிடப்படும் விளம் பரங்களின் நம்பகத் தன்மையை நாங்கள் சோதிப்பதில்லை. அதன் நோக்கம் அரசியல் கட்சிகளுக்கு உதவுவதற்காக இல்லை. மாறாக செய்திகளின் நம்பகத்தன்மையை மக்களே முடிவு செய்ய வேண் டும் என்ற நிலைப்பாட்டிலேயே அவற்றை சோதிப்பதில்லை.

அதே சமயம் வன்முறையை தூண்டும் விதமாகவும், சமூகத் துக்கு தீங்கு விளைவிக்கும் நோக் கில் பரப்பப்படும் தகவல்களை யும் நாங்கள் அனுமதிப்பதில்லை என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x