

2019 ஜூலை-செட்பமர் காலாண்டில் வீட்டு வசதிக் கட்டுமானத் துறையில் புதிய வீடு கட்டுமானங்க, விற்பனைகள் சரிந்ததாக பிராப் டைகர் என்ற ரியல் எஸ்டேட் கன்சல்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் புதிய வீடுகளுக்கான கட்டுமானத்திட்டங்களில் 45% சரிவு ஏற்பட்டுள்ளது. இதே காலாண்டில் வீடுகள் விற்பனையும் 25% சரிவு கண்டுள்ளது.
ஒரே ஆண்டில் இரண்டு காலாண்டுகளுக்கு இடையேயும் ஒப்பிடும் போது சரிவு நிலையே காணப்படுவதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதாவது புதிய வீடு கட்டும் திட்டங்களும், வீடுகள் விற்பனையும் சரிவு கண்டுள்ளன.
2018-ல் இதே காலாண்டில் புதிய வீட்டுக் கட்டுமானத் திட்டங்கள் மற்றும் வீடுகள் விற்பனையை ஒப்பிடும் போது இரண்டுமே முறையே 2019 ஜூலை-செப். காலாண்டில் 32%, 23% குறைந்துள்ளன.
வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தீர்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் துறைக்கு முதலீட்டை வழங்குவது வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பணப்புழக்கம் இறுக்கமாக இருப்பதால் புதிய வீடு கட்டுமானத் திட்டங்கள் வரும் காலங்களில் கூட சரிவு காணும் என்ற நிலையில் வீடுகள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
-தி இந்து பிசினஸ்லைன்