Published : 16 Oct 2019 08:24 AM
Last Updated : 16 Oct 2019 08:24 AM

பிளிப்கார்ட், அமேசான் மீது புகார்

அமேசான், பிளிப்கார்ட் போன்றஇணைய வழி வர்த்தக நிறுவனங்கள் இந்திய வர்த்தக விதிகளை மீறுவதாக சில்லறைவர்த்தகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருவாரங்களுக்குமுன் நடைபெற்ற பண்டிகை தின விற்பனையில், இந்நிறுவனங்கள் விதிகளுக்கு மாறாக தள்ளுபடிகளை அறிவித்து இருப்பதாக அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு மத்திய வர்த்தக அமைச்சகத்திடம் புகார் அளித்து உள்ளது. அதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த பண்டிகை தின விற்பனையில் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் விதிகளைப் பின்பற்றி சலுகைகளை அறிவித்துள்ளதா என்பது குறித்துஆய்வு செய்ய உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x