

புதுடெல்லி
தகவல் தொழில் நுட்ப நிறுவனமான விப்ரோ, செப்டம்பர் மாதம் முடிந்த நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.2,561 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலத்தில் ஈட்டிய லாபத்தை விட 36 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் ரூ.1,885 கோடி லாபம் ஈட்டியது. அதேபோல் நடப்பு நிதி ஆண்டில் முதல் காலாண்டை ஒப்பிடுகையில் இது 6 சதவீத அதிக லாபம் ஆகும். நிறுவனத்தின் மொத்த வருவாய் இரண்டாம் காலாண்டில் 4 சதவீதம் உயர்ந்து ரூ.15,130 கோடியாக உள்ளது.