Published : 15 Oct 2019 09:34 AM
Last Updated : 15 Oct 2019 09:34 AM

இந்தியாவை சரிவிலிருந்து மீட்க ராவ்-மன்மோகன் சிங் சிந்தனைகள் தேவை பொருளாதார நிபுணர் கருத்து

புதுடெல்லி

இந்தியா தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலை யிலிருந்து மீண்டு வர வேண்டு மெனில் நரசிம்ம ராவ்-மன் மோகன் சிங் கூட்டணியின் சிந்தனை களைப் பயன்படுத்தலாம் என பொருளாதார நிபுணர் பிரபாகர் பரகாலா கருத்து தெரிவித் துள்ளார்.

இந்தியா தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. நுகர்வு வெகு வாகக் குறைந்து உற்பத்தி துறை யும், சேவைத் துறையும் ஒருசேர பாதிப்பைச் சந்தித்துள்ளன. நடப்பு நிதி ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி 6 சதவீதமாகக் குறையும் என உலக வங்கித் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இத்தகைய கடும் பொருளாதார சரிவிலிருந்து மீட்க சரியான பொருளாதார சிந்தனைகள் அவசியம் என்று பிரபாகர் பரகாலா கூறினார்.

பாஜக அரசு பிவி நரசிம்ம ராவ்- மன்மோகன் சிங் கூட்டணியின் சிந்தனைகளைப் பயன்படுத்துவது குறித்து யோசிக்கலாம். உலகமய மாக்கல், சந்தைப் பொருளா தார உலகில் நடைமுறைக்கு ஏற்ற கொள்கைகளை வகுப்பதும் செயல் படுத்துவதும் அவசியமானது.

எனவே பாஜக அரசியலைத் தாண்டி ராவ்-மன்மோகன் சிங் கூட்டணியின் பொருளாதார சிந் தனைகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை இந்தியப் பொருளா தாரத்தில் கொண்டுவர முடியும். அதேசமயம் பாஜகவின் பொருளா தார கொள்கைகளின் மீது நிலவும் நம்பிக்கையற்ற தன்மையை உடைக்கவும் முடியும். இதனால், எப்படி சர்தார் வல்லபாய் படேல் பாஜகவின் அரசியல் முகமாக இருக்கிறாரோ, அதைப் போல நரசிம்மராவ் அதன் பொருளாதார கொள்கைகளின் முகமாக மாற வாய்ப்புள்ளது.

ஏனெனில் துறைகளின் சரிவு விவரங்கள் தொடர்ந்து செய்திகள் மூலமாக மக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கின்றன. மக்களி டையே அதுகுறித்த விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது என் பதை சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அரசு எல்லா செய்திகளை யும் மறுத்துக் கொண்டே இருக் கிறது. பொருளாதாரம் சரிந்து கொண்டிருப்பதையே ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் போக்கு நாட்டுக்கு நல்லதல்ல, அரசு விரை வில் பொருளாதாரத்தை மீட்டெடுப் பதில் அக்கறையுடன் இருக்கிறது என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய கடமையைப் பெற்றிருக்கிறது என்று அவர் கூறினார்.

லண்டன் ஸ்கூல் ஆஃப் பிசின ஸில் பட்டம் பெற்ற பிரபாகர் பர காலா ஆந்திரப் பிரதேச அரசின் முன்னாள் ஆலோசகராக இருந்த வர். மேலும் இவர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடைய கணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x