பொதுத் துறை வங்கிகளின் சிஇஓ-க்களுடன் இன்று நிர்மலா சீதாராமன் சந்திப்பு

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

புதுடெல்லி

வங்கிகளின் நிதிச் செயல்பாடு தொடர்பாக பொதுத் துறை வங்கி களின் தலைமை நிர்வாக அதிகாரி களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சந் திக்க உள்ளார். வங்கி சாரா நிதி நிறு வனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பணப்புழக்கம் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட உள்ளது. இந்தியா பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை எதிர் கொண்டு வருகிறது.

அவற்றுக்கான தீர்வுகள் குறித் தும் இந்த சந்திப்பில் கலந் தாலோசிக்கப்பட உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு வங்கி களுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவில் பகுதி கடன் உத்திரவாதம் மேற் கொள்வதற்கான திட்டத்துக்கான வழிகாட்டுதல்களை அளித்தது.

அதன்படி வங்கிகள், பொருளாதார அளவில் நல்ல நிலையில் உள்ள வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பத்திரங்களை வாங்கிக் கொள் ளலாம்.

இந்நிலையில் இன்றைய சந்திப் பில் அதுதொடர்பான விவரங்களை வங்கிகள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் ‘லோன் மேளா’ அறிவிக் கப்பட்டு இருந்தது. அது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்படும் என்று தெரிகிறது. முதற்கட்டமாக 400 மாவட்டங்களில் நடத்தப்பட்ட ‘லோன் மேளா’ நிகழ்ச்சி கடந்த 7-ம் தேதி நிறைவுற்றது. அடுத்தகட்டமாக வரும் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மீதுமுள்ள 209 மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in