Published : 13 Oct 2019 09:51 AM
Last Updated : 13 Oct 2019 09:51 AM

மதிப்புமிக்க நாடுகளின் பட்டியல் வெளியீடு: 7-வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா

புதுடெல்லி

மதிப்புமிக்க நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 7-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பிராண்ட் மதிப்பு முந்தைய ஆண்டைவிட 19 சதவீதம் உயர்ந்து 2,562 பில்லியன் டாலராக உள்ளது. இந்நிலையில் சென்ற ஆண்டு 9-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது. அமெரிக்காவை தலைமையிட மாகக் கொண்ட பிராண்ட் பைனான்ஸ் என்ற பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் இந்த தர வரிசைப் பட்டியல் இடம் பெற்றுள்ளது.

பிராண்ட் பைனான்ஸ் நிறுவனம் உலக நாடுகளின் பிராண்ட் மதிப்பு அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில் முதல் பத்து நாடுகள் வரிசை யில் இந்தியாவும் இடம் பிடித் துள்ளது. சென்ற ஆண்டின் மதிப்பை விட இந்த ஆண்டு இந்தியாவின் பிராண்ட் மதிப்பு 19 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா தரவரிசைப் பட்டியலில் 7 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘சென்ற ஆண்டுகளில் உலகப் பொருளாதார நெருக்கடி நிலையில் இருந்து இந்தியா தன்னை உடனே மீட்டு எடுத்துக் கொண்டது. ஆனால், தற் போது உற்பத்தித் துறை மற்றும் கட்டுமானத் துறையில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக அதன் வளர்ச்சி விகிதம் சற்று குறைந்துள் ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

27,715 பில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் அமெரிக்கா முதல் இடத்திலும், 19,486 பில்லியன் டாலர் பிராண்ட் மதிப்புடன் சீனா 2-வது இடத்திலும் உள்ளன. சென்ற ஆண்டில் இருந்ததைவிட சீனாவின் பிராண்ட் மதிப்பு 40 சதவீதம் உயர்ந்துள்ளது.

சீனாவைத் தொடர்ந்து ஜெர்மன் 3-வது இடத்தை பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, தென் கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் 20 நாடுகளின் பட்டியலில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவைச் சேர்ந்த 11 நாடுகள் இடம் பெற்றுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x