Published : 12 Oct 2019 08:19 AM
Last Updated : 12 Oct 2019 08:19 AM

பண மோசடி வழக்கில் ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் நிறுவனர்கள் கைது

புதுடெல்லி

மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ரான்பாக்ஸி நிறு வனத்தின் முன்னாள் நிறுவனர் களான மல்விந்தர் சிங் மற்றும் ஷிவ்விந்தர் சிங் ஆகிய இருவரை யும் பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார்கள் கைது செய்துள்ள னர். நேற்று முன்தினம் (வியாழன்) ஷிவ்விந்தர் சிங் கைதாகிய நிலை யில், நேற்று அவரது சகோதரர் மல் விந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.

சிங் சகோதர்கள் கடந்த ஆண்டு வரை ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர் களாக இருந்து வந்தனர். அப்போது அந்நிறுவனம் தொடர்பாக ரூ.740 கோடி கடன்பெற்று அதை அவர்களுக்கு சொந்தமான வேறு நிறுவனங்களில் முதலீடு செய்துள் ளதாக ரெலிகேர் பின்வெஸ்ட் நிறுவனம் குற்றம்சாட்டியது. அந்த வழக்கு தொடர்பாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இவர்கள் தவிர, இந்த மோசடியில் தொடர்புடையதாக சுனில் கோத்வானி, கவி அரோரா, சுனில் சக்ஸேனா ஆகியோரும் வியாழக்கிழமை கைது செய்யப் பட்டனர்.

இதில் சுனில் கோத்வானி ரெலிகேர் எண்டர்பிரைஸஸ் நிறுவ னத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் பதவி வகித்தவர்.

இவர்களது மோசடியினால் ரிலிகேர் பின்வெஸ்ட் நிறுவனத் துக்கு ரூ.2,400 கோடி அளவில் இழப்பு ஏற்பட்டு, அந்நிறுவனம் பொருளாதார ரீதியாக கடும் நஷ்டத்தை சந்தித்து உள்ளது. இந்நிலையில் இந்த மோசடி விவகாரம் தொடர்பாக சிங் சகோதர்கள் மற்றும் ரெலிகேர் எண்டர்பிரைஸஸ் தொடர்புடைய அதிகாரிகள் மீது கடந்த டிசம்பர் புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசா ரணையின் அடிப்படையிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி போலீஸார் கள் தெரிவித்தபோது, ‘சிங் சகோதர்கள் மற்றும் அவர்களுடன் கைது செய்யப்பட்டவர்களும் கடந்த ஆண்டுகளில் ரெலிகேர் குழுமங்களில் முக்கிய பொறுப் பில் இருந்துள்ளனர். அந்த கால கட்டங்களில் அந்நிறுவன வளர்ச்சிக் காக கடன் பெற்று அதை வேறு நிறுவனங்களுக்காக பயன்படுத்தி உள்ளனர்.

இதனால் ரெலிகேர் பின் வெஸ்ட் நிறுவனம் பொருளாதார ரீதியாக கடும் இழப்பை சந்திக்க நேரிட்டது. அந்த வழக்கு தொடர் பாகவே தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என்று கூறினர்.

சிங் சகோதர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஃபோர்டிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழு விலிருந்து பதவி விலக நேரிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x