

பென்சில்வேனியா
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத் துக்கு அமெரிக்க நீதிமன்றம் ரூ.56,000 கோடி அபராதம் விதித்துள் ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நூற்றாண்டு பழமைமிக்க ஜான் சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், மருந்துப் பொருட்கள் உட்பட, நுகர்வுப் பொருட்கள் தயாரிப்பிலும் ஈடுபட்டுவருகிறது.
இந்நிலையில் இதன் தயாரிப்பு களில் ஒன்றான ‘ரிஸ்பெரிடால்’ என்ற மருந்துப் பொருளில் ஆண் களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதைப் பயன்படுத்தும் சிறுவர் களுக்கு மார்பகம் பெண்களைப் போன்று வளருவதாக புகார் அளிக்கப்பட்டது. அதுதொடர்பான விசாரணையில் பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பில டெல்பியா நீதிமன்றம் ரூ.56,000 கோடி அபராதம் விதித்தது. இந் நிலையில், அந்தக் குற்றச்சாட் டில் உண்மையில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உள்ளதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.