

ஜெனிவா
உலகளாவிய போட்டித் திறன் அட்டவணையில் இந்தியாவின் இடம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள் ளது. முந்தைய ஆண்டில் 58-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 68-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. பிற நாடுகள் தங்களது பொருளாதார கட்டமைப் பில் முன்னேறிய நிலையில் இந்தியா பின்னடைவை சந் தித்துள்ளது. இந்த தகவலை உலகப் பொருளாதார மையம் வெளியிட்டு இருக்கிறது.
நாட்டின் பொருளாதாரம், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகள், கல்வி, திறன், சுகாதாரம் உட்பட நாட்டின் வளர்ச்சிக்கான காரணிகளை அடிப் படையாகக் கொண்டு இந்த அட்ட வணை உருவாக்கப்படுகிறது. உல களாவிய 141 நாடுகள் இதில் பட்டி யலிடப்பட்டுள்ளன. அதில் இந்தியா 68-வது இடத்தில் உள்ளது.
இதுகுறித்து ஜெனிவா நகரில் உள்ள உலகப் பொருளாதாரம் மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பேரியல் பொருளாதாரம், சந்தை அளவு அடிப்படையில் இந்தியா முன்னணி இடத்தில் இருக்கிறது. குறிப்பாக சந்தை அளவு அடிப் படையில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருந்த போதிலும் அடிப்படை வசதிகள் வகையில் இந்தியா மிகவும் பின் தங்கி உள்ளது. சுகாதாரம் அளவில் இந்திய மிக மோசமான இடத் தில் உள்ளது.
குடிமக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கையை உருவாக்கித் தர இந்தியா தவறியுள்ளது. தொழிலாளர்களுக்கான அடிப் படை உரிமை இந்தியாவில் முறை யாக வழங்கப்படுவதில்லை. இது போன்ற காரணங்களால் போட்டித் திறன் மதிப்பீட்டில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. குடிமக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை அடிப்படையில், மொத்த முள்ள 141 நாடுகளில் இந்தியா 109 இடத்தில் உள்ளது. இதுதவிர, திறன் அடிப்படையிலும் இந்தியா பின்தங்கி உள்ளது. போதிய திறன் கொண்ட பணியாளர்கள் இந்தியாவில் குறைவாக உள்ளனர். திறன் அடிப்படையில் 107-வது இடத்தில் உள்ளது. அதேபோல் பணிச்சூழல் அடிப்படையில் பாலினப் பாகுபாடு இந்தியாவில் அதிக அளவில் நிலவுகிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்கான வேறுபாடு அதிகமாக உள்ளது. பாலினப் பாகுபாடு அடிப்படையில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது. இவை அனைத்தையும் கணக்கில் கொண்டே உலகளாவிய போட்டித்திறன் தரவரிசை அளிக்கப் படுகிறது. அதன் அடிப்படையில் இந்தியா முந்தைய ஆண்டை விட 10 இடங்கள் சரிந்து 68-வது இடத் துக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா வைத் தொடர்ந்து, அண்டை நாடு களான இலங்கை(84), வங்க தேசம்(105), நேபாளம் (108), பாகிஸ் தான் (110) இடங்களில் உள்ளன.
கொலம்பியா, தென் ஆப் பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகள் முந்தயை ஆண்டுகளில் இந்தி யாவை விட பின்தங்கி இருந்தன. அந்நாடுகள் தற்போது தரவரிசை யில் இந்தியாவை முந்தியுள்ளன.
இந்த தரவரிசையில் சிங்கப்பூர், அமெரிக்காவை பின்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்கா 2-வது இடத்திலும், சிறப்பு நிர்வாகத்துக்குகீழான ஹாங்காங் 3-வது இடத்திலும், நெதர்லாந்து 4-வது இடத்திலும், சுவிட்சர்லாந்து 5-வது இடத்திலும் உள்ளன. சீனா 28-வது இடத்தைப் பிடித்துள்ளது. குடிமக்களுக்கு சுகாதாரமான வாழ்க்கையை உருவாக்கித் தர இந்தியா தவறியுள்ளது.
தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமை இந்தியாவில் முறையாக வழங்கப்படுவதில்லை.
இதுபோன்ற காரணங்களால் போட்டித்திறன் மதிப்பீட்டில் இந்தியா பின்னடைவை சந்தித்து உள்ளது.