Published : 09 Oct 2019 07:21 PM
Last Updated : 09 Oct 2019 07:21 PM

‘வாய்ஸ் கால்களுக்கு’  முதல்முறையாக கட்டணம்: ஜியோ முடிவு

மும்பை

ஜியோ நிறுவனம் தற்போது முதல் முறையாக வாய்ஸ் கால்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்ற அளவில கட்டணம் வசூலிக்க உள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ஜியோ, கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் வாடிக்கையாளர்கள் பயன்பாட் டுக்கு வந்தது. அச்சமயத்தில் ஏர் டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தொலை தொடர்பு மற் றும் இணைய சேவையில் முன் னணியில் இருந்து வந்தன.

இந்த மூன்றாண்டு காலகட்டத்தில் இந் நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, ஜியோ நிறுவனம் தொலை தொடர்பு சந்தையில் முதல் இடம் பிடித்துள்ளது. ஜூன் மாதம் முடிந்த முதல் காலாண்டில் ஜியோ நிறுவனம் 33.1 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வழங்கி வரும் ஜியோ நிறுவனம் தற்போது முதல் முறையாக வாய்ஸ் கால்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்ற அளவில கட்டணம் வசூலிக்க உள்ளது. மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான அழைப்புகளுக்கு இதுவரை ஜியோ நிறுவனம் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை.

ட்ராய் வழிகாட்டுதலின்படி இந்த கட்டணம் நிறுவனங்கள் இடையே வசூலிக்கப்படுகிறது. இந்த இண்டர்கனெக்ட்டிவிட்டி கால்களுக்கான கட்டணத்தை ஜியோ நிறுவனம் இதுவரை செலுத்தி வந்துள்ளது.

மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் ஏர்டெல், வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட 13,500 கோடி ரூபாய் அளவிற்கு கட்டணமாக செலுத்தியுள்ளது.

மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு கட்டணம் செலுத்தியதால் இழப்பு ஏற்படாமல் இருக்கும் பொருடடு அந்த கட்டணத்தை இனி வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்க ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி வாய்ஸ் கால்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 6 பைசா என்ற அளவில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனினும் வாடிக்கையாளர்கள் செலுத்தும் இந்த கட்டணத்திற்கு நிகராக இலவச டேட்டாவை பெற்றுக்கொள்ளலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x