Published : 09 Oct 2019 09:31 AM
Last Updated : 09 Oct 2019 09:31 AM

அனுமதி கிடைப்பதில் தாமதம்: செல்போன் டவர்கள் அமைப்பதில் சிக்கல்

புதுடெல்லி

உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்படாத காரணத்தினால், செல்போன் டவர் அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆண்டு இலக்கில் 60 சதவீத அளவிலேயே டவர்கள் நிறுவப்படுகிறது என்று செல்லுலர் ஆப்ரேட்டர்களின் சங்கம் (சிஓஏஐ) தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் அளவில் புதிய டவர்கள் அமைக்க திட்டமிடப்படுகிறது. ஆனால் உள்ளூர் அதிகாரிகளிமிடருந்து உரிய நேரத்தில் அனுமதி கிடைப்பதில்லை. இதனால் ஆண்டு இலக்கான 1 லட்சம் டவர்களுக்குப் பதிலாக அவற்றில் பாதி அளவிலேயேஅமைக்க முடிகிறது என்று சிஓஏஐ-யின் பொது இயக்குநர் ராஜன் மாத்யூ தெரிவித்தார்.

செல்பேசி பயன்பாட்டின் தரத்தை அதிகரிப்பதற்காக செல் போன் டவர்கள் தொடர்ச்சியாக அமைக்கப்படுகிறது. குறிப்பிட சுற்றளவில் டவர் இல்லையென் றால் தரமான சேவை கிடைக்காது. இந்நிலையில் தேவையான இடங்களுக்கு செல்போன் டவரை அதற்கான நிறுவனங்கள் அமைத்து வருகின்றன. இவ்வாறு புதிய செல்போன் டவர்கள் அமைப்பதற்கு உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி தேவை. இந்நிலையில் அவர்களிடமிருந்து உரிய நேரத்தில் அனுமதி கிடைப்பதில்லை.

இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘இப் பிரச்சனை தொடர்பாக தொலை தொடர்பு துறை பல்வேறு அமைப்புகளிடம் பேசியுள்ளது. அது முக்கியமான தொடக்கம். தொலை தொடர்பு துறை சார்ந்த அனைத்து அமைப்புகளும் இப் பிரச்சினையைத் தீர்க்க முயலவேண்டும்’ என்று தெரிவித் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x