Published : 09 Oct 2019 09:30 AM
Last Updated : 09 Oct 2019 09:30 AM

என்பிஎஃப்சி-களுக்கு சிறப்பு சலுகை கிடையாது: ஆர்பிஐ துணை கவர்னர்கள் திட்டவட்டம்

மும்பை

வங்கியல்லாத நிதி நிறுவ னங்களுக்கு (என்பிஎஃப்சி) நிதி நெருக்கடியைப் போக்க சிறப்பு சலுகை எதையும் அறிவிக்கும் திட்டம் ஏதும் ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்று ஆர்பிஐ துணை கவர்னர் என்.எஸ். விஸ்வநாதன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறு வனமான ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனம் மிகப் பெரும் நிதி நெருக் கடிக்கு உள்ளானது. இந்நிறுவனத் துக்கு கடன் வழங்கிய வங்கியல் லாத நிதி நிறுவனங்களுக்கு இத னால் பெரும் நெருக்கடி உருவாகி யுள்ளது. பணப்புழக்கம் இல்லாத நிலையில் நிதி நெருக்கடியை சமா ளிக்க மத்திய அரசு ரிசர்வ் வங்கி மூலமாக ஏதேனும் சலுகையை அறி விக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் அத்தகைய திட்டம் ஏதும் பரிசீலனையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

வங்கியல்லாத நிதி நிறுவனங் கள் கடன் வழங்குவதற்கு போதிய நிதி புழக்கம் தற்போது உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நிதி நிறுவனங்களில் ஏஏஏ தரச் சான்றுக்கும் குறைவான மதிப்பீடு பெற்ற நிறுவனங்கள் கடன் பெறு வதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. இத்தகைய நிறுவனங்கள் கடன் திரட்டுவதில் மிகப் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளன. இத்தகைய என்பிஎஃப்சி நிறுவனங்கள் போதிய நிதி புழக்கத்தில் இல்லாமல் கடன் வழங்குவதில் பெரும் இடர் பாட்டை எதிர்கொண்டுள்ளன. இது வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும். இதற்கு அரசு எத்தகைய நடவ டிக்கை எடுத்துள்ளது என்று கேட்கப்பட்டதற்கு விஸ்வநாதன் இவ்விதம் பதிலளித்தார்.

பிஎம்சி வங்கி முறைகேட்டுக்குப் பிறகு, கண்காணிப்பு மற்றும் கட்டுப் பாடுகளை அதிகரிக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வங்கி அல்லது நிதி நிறுவனங்களை வெளியிலிருந்து கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன. இது தவிர என்பிஎஃப்சி-க்களின் செயல்பாடு களை ஆராயவும் தணிக்கை செய்யவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தணிக்கை முறை கட்டா யம் மேற்கொள்ளப்படும் என்று மற்றொரு துணை கவர்னரான எம்.கே. ஜெயின் குறிப்பிட்டார்.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் கடன் வழங்குவதில் மேலாண் நிர்வாக வரையறை குறித்து ஒரு சுற்றறிக் கையை அனுப்பியுள்ளது. அதில் ரூ.100 கோடி மதிப்புடைய டெபா சிட் திரட்டும் என்பிஎஃப்சி-க்கள் மற் றும் டெபாசிட் திரட்டாத என்பி எப்சிக்களுக்கான கட்டுப்பாடுகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. என்பி எஃப்சி-க்களின் சொத்து மதிப்பு நிர் வாகம் குறித்து இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ஒரு வரைவு அறிக் கையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் டெபாசிட் திரட்டும் என்பிஎஃப்சிக்கள் மற்றும் டெபாசிட் திரட்டாத என்பிஎஃப்சிக்களின் நிதிப் புழக்க அளவு (எல்சிஆர்) மற்றும் ரூ. 5 ஆயிரம் கோடிக்கு அதிகமாக நிதிப் புழக்கம் உள்ள என்பிஎப்சிக்களுக்கான விரிவான வழிகாட்டுதல் உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x