Published : 08 Oct 2019 03:06 PM
Last Updated : 08 Oct 2019 03:06 PM

தொடர்ந்து 8-வது மாதமாக செப்டம்பரில் உற்பத்தியைக் குறைத்தது மாருதி சுசூகி

புதுடெல்லி, பிடிஐ

கடும் விற்பனைச் சரிவினால் மாருதி சுசூகி இந்திய நிறுவனத்தின் வாகன உற்பத்தி செப்டம்பர் மாதத்தில் 17.48% குறைக்கப்பட்டது. அதாவது 8வது மாதமாக தொடர்ச்சியாக உற்பத்தியைக் குறைத்துள்ளது மாருதி சுசூகி.

செப்டம்பர் மாதத்தில் மொத்த உற்பத்தி 1,32,199 மட்டுமே, இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1,60,219 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பயணிகள் வாகன உற்பத்தி செப்டம்பர் மாதம் 1,30,264 ஆக இருந்தது, இதே கடந்த 2018 செப்டம்பரில் 1,57,659 யூனிட்களாக இருந்தது. 17.37% உற்பத்திக் குறைக்கப்பட்டுள்ளது.

ஆல்டோ, நியூவேகன் ஆர், செலிரியோ, இக்னிஸ், ஸ்விப்ட், பலேனோ, டிசையர் ஆகிய மினி பிரிவு கார்கள் உற்பத்தி செப்டம்பரில் 98,337 யூனிட்கள்தான் இது கடந்த செப்டம்பரில் 115,576 ஆக இருந்தது, அதாவது 14.91% குறைக்கப்பட்டுள்ளது.

அதே போல் யுடிலிட்டி பிரிவில் விடாரா பிரெஸா, எர்டிகா, எஸ்.கிராஸ் ஆகியவற்றின் உற்பத்தி 22,226 யூனிட்களிலிருந்து 18,435 ஆக குறைக்கப்பட்டது.

நடுததர அளவு செடான் சியாஸ் செப்டம்பரில் 2,350 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட்டன.

கனரகமல்லாத வர்த்தக பயன்பாட்டு வாகனமான சூப்ப்ர் கேரி உற்பத்தியும் 1,935 யூனிட்களாக குறைக்கப்பட்டது.

முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களான எம்.எஸ்.ஐ, ஹியுண்டாய், மஹீந்திரா, டாடா மோட்டர்ஸ், டொயோட்டா, ஹோண்டா, ஆகிய நிறுவனங்களும் பயணிகல் வாகன உற்பத்தியை செப்டம்பரில் குறைத்துள்ளது. விழாக்காலங்களுக்காக பல சலுகைகளை அறிவித்தும் ஆட்டோமொபைல் தொழிற்துறை சரிவிலிருந்து மீட்கப்பட முடியவில்லை என்பதையே இந்த உற்பத்திக் குறைப்புக் காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x