

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையம் அமைப்பது தொடர்பான புதிய வழிகாட்டுதல் களை மத்திய அரசு வெளியிட் டுள்ளது.
சுற்றுச்சூழல் மாசுபாடு காரண மாக உலக நாடுகள் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றன. இந்நிலையில் இந்தி யாவும் மின்சார வாகனப் பயன் பாட்டுக்கு மாற முடிவு செய்துள் ளது. அதன்பகுதியாக 2025-ம் ஆண்டுக்கு பிறகு பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் மின்சாரத் தில் இயங்கக் கூடியவையாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து இருந்தது.
இந்நிலையில் அவற்றுக்கான உள்கட்டமைப்பை உருவாக்கும் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் இறங்கியுள்ளன. இந்நிலையில் எரிசக்தி திறன் சார்ந்த மத்திய அமைப்பு இதுகுறித்த புதிய வழிகாட்டுதல்களை வெளி யிட்டுள்ளது. அதன்படி நாடுமுழு வதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைப் பது தொடர்பான வழிமுறைகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளன. 3 கிமீ பரப்பளவில் குறைந்தது 1 சார்ஜிங் நிலையமும், நெடுஞ் சாலைகளில் 25 கிமீ இடை வெளியில் 1 சார்ஜிங் நிலையமும் அமைக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக பெரு நகரங்களில் குறிப்பாக 40 லட்சம் மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 1 முதல் 3 ஆண்டுக்குள் அதன் நகர் மையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் நிலை யங்களை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக பிற முக்கிய நகரங்களில் 3 முதல் 5 ஆண்டுக்குள் சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.