

புதுடெல்லி
இந்தியாவை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவரும் வகையில் வரும் நாட்களில் மத்திய அரசு மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள உள்ளதாக நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் வளர்ச்சி கடந்த 6 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு நடப்பு நிதி ஆண் டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக குறைந்துள்ளது. மக்களின் நுகர்வு, நிறுவனங் களின் உற்பத்தி என பொருளாதார வளர்ச்சிக் கான காரணிகள் கடும் நெருக்கடிக்கு உள் ளாகி இருக்கின்றன. வாகன நிறுவனங்களின் விற்பனை மோசமான அளவில் சரிந்துள்ளது. அதனால் வாகன தயாரிப்பு தொடர்புடையை 3.5 லட்சம் ஊழியர்கள் வேலை இழந்தனர்.
வேலையின்மை 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை இறுதியாக 35 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. மத்திய அரசு குறிப்பிடத் தக்க அளவில் புதிய அறிவிப்புகளை கடந்த 2 மாதங்களில் வெளியிட்டு உள்ளது.
இந்நிலையில் இது குறித்து அவர் கூறியதா வது, ‘இந்தியாவின் வளர்ச்சி கடந்த 5 ஆண்டு களில் சராசரியாக 7.5 சதவீத அளவில் இருந்தது. 2017-18 நிதி ஆண்டின் இறுதிக் காலாண்டில் 8.1 சதவீதமாக இருந்த வளர்ச்சி விகிதம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண் டில் 5 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலை யில் தற்போதைய பொருளாதார சரிவை எதிர் கொள்ள மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த வருடத்தில் மட்டும் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 110 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. ரிசர்வ் வங்கியால் ஒரு எல்லைக்குமேல் செயல்திட்டங்களை கொண்டுவர முடியாது. அதனால் மத்திய அரசு பல்வேறு அதிரடி சீர்திருத்தங்களை கொண்டுவருகிறது. 10 பொதுத்துறை வங்கி களை இணைத்து 4 வங்கிகளாக மாற்றுவதற் கான அறிவிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் வெளிட்டது.
அதைத் தொடர்ந்து நிறுவனங்களுக்கான நிறுவன வரியும் 10 சதவீத அளவில் குறைக்கப் பட்டது. வணிகத்தில் ஈடுபடுவது அரசின் வேலை அல்ல. அவற்றை ஒழுங்குபடுத்து வதே அரசின் நோக்கமாக இருக்க வேண் டும். அந்தவகையில் தற்போது பொதுத் துறை நிறுவனங்களில் பங்கு விலக்கலை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு கொண்டுவரும் வகையில் மேலும் பொருளா தார கட்டமைப்பு தொடர்பான புதிய சீர்திருத் தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும்’ என்று தெரிவித்தார். 2017-18 நிதி ஆண்டின் இறுதிக் காலாண்டில் 8.1 சதவீதமாக இருந்த வளர்ச்சிவிகிதம் நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 5 சதவீதமாக குறைந்துள்ளது.