

மும்பை
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் தனது இந்திய செயல்பாடுகளை படிப்படியாகக் குறைத்து வெளியேற திட்டமிட்டுள் ளது. இந்தியாவில் இந்நிறுவனத் துக்கு 2 உற்பத்தி ஆலைகள் உள்ளன. ஒன்று தமிழகத்தில் சென் னையை அடுத்த மறைமலை நகரி லும் மற்றொன்று குஜராத் மாநிலம் சனந்த் நகரிலும் உள்ளது.
புதிய ஏற்பாடாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்துடன் ஃபோர்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி ரூ.1,900 கோடி மதிப் பீட்டில் புதிய நிறுவனம் உருவாக்கப்பட திட்டமிட்டுள்ளது.
உலக அளவில் நான்காவது பெரிய கார் சந்தையாக இந்தியா விளங்குகிறது. ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஃபோர்டு நிறுவனத்தால் பெரிய அளவில் இந்தியச் சந்தையைக் கைப்பற்ற முடியவில்லை. இந்தி யாவில் 1995-ம் ஆண்டு செயல் பாடுகளைத் தொடங்கிய ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் 3 சதவீத கார் சந்தையை மட்டுமே பிடித் துள்ளது.
இந்நிலையில் ஃபோர்டு நிறு வனம் வெளிநாடுகளில் செயல் படும் ஆலைகளை உத்தி சார் அடிப்படையில் செயல்படுத்தி செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதி யாக தனது இந்திய செயல்பாடு களை மஹிந்திராவிடம் ஒப் படைக்க முடிவு செய்துள்ளது.
இவ்விரு நிறுவனங்களும் கூட் டாக உருவாக்கும் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளை போர்டு வைத் திருக்கும். எஞ்சியுள்ள 51 சதவீத பங்குகள் மஹிந்திரா வசம் சேரும். இரு நிறுவனங்களிடையிலான இந்த ஒப்பந்தம் அடுத்த ஆண் டில் முழுமை பெறும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் போர்டு நிறுவனத்துக்குள்ள சொத்துகள், இரண்டு ஆலைகள் மஹிந்திரா நிறுவனத்துக்கு மாற்றப் படும். அதேபோல போர்டு நிறு வனப் பணியாளர்கள் புதிதாக உரு வாக்கப்படும் நிறுவனத்துக்கு மாற்றப்படுவர். சனந்த் நகரில் உள்ள இன்ஜின் உற்பத்தி பிரிவு மற்றும் சென்னையில் உள்ள குளோ பல் வர்த்தக மையம் ஆகிய இரண்டை மட்டும் ஃபோர்டு தன் வசம் வைத்துக் கொள்ளும்.
புதிதாக உருவாக்கப்படும் நிறு வனத்தை மஹிந்திரா நிறுவனம் நிர்வகிக்கும். இந்நிறுவனம் ஃபோர்டு தயாரிப்புகளை இந்தியா வில் விற்பனை செய்யும். அதேபோல ஃபோர்டு மற்றும் மஹிந்திரா தயாரிப்புகளை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்.