

புதுடெல்லி
மின் விநியோக நிறுவனங்கள், மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ரூ.78,000 கோடியாக உயர்ந்துள் ளது. இது முந்தைய ஆண்டை விட 57 சதவீதம் அதிகம் ஆகும்.
மின் தயாரிப்பு நிறுவனங்களிட மிருந்து வாங்கும் மின்சாரத்துக் கான தொகையை செலுத்த மின் விநியோக நிறுவனங்களுக்கு 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அந்த காலக் கெடுவுக்குள் செலுத்தப்படாத நிலு வைத் தொகை தாமதக் கடனாக மாறிவிடும். அந்த தாமதக் கடன் தொகைக்கு வட்டி விதிக்கப்படும். இவ்வாறு 60 நாட்கள் அவகாசத்துக் குப் பிறகும் செலுத்தப்படாத கடன் தொகை ஆகஸ்ட் மாதத்தில் ரூ.59,500 கோடியாக உள்ளது.
இதில் 25 சதவீத அளவில் தனியார் மின் தயாரிப்பு நிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டியதாகும். பொதுத் துறை மின் உற்பத்தி நிறு வனங்களான என்டிபிசி, என்எல்சி, என்ஹெச்பிசி-க்கு ரூ15,450 கோடி அளவில் விநியோக நிறுவனங் களிடமிருந்து கால தாமதக் கடன்கள் வர வேண்டி உள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா,கர்நாடகா, ஜம்மு, காஷ்மீர் ஆகிய மாநிலங்களே உரிய காலத் தில் நிலுவைத் தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்துவதில் முன்னிலையில் இருக்கின்றன. இந் நிலையில் மின் உற்பத்தி நிறுவனங் களுக்கு உத்திரவாதம் அளிக்கும் விதமாக மத்திய அரசு புதிய விதிமுறையை கொண்டுவந்துள் ளது. அதன்படி, ஆகஸ்டு 1 முதல் மின் உற்பத்தி நிறுவனங்களிட மிருந்து மின்சாரம் வாங்குவதற்கு மின் விநியோக நிறுவனங்கள் உத்திரவாதக் கடிதம் அளிக்க வேண் டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.