

மும்பை
ரிசர்வ் வங்கியின் கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ள பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கியின் செயல்பாடுகளில் காணப்பட்ட விதிமீறல்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன.
பிஎம்சி வங்கி வழங்கிய கடன் அளவை மறைப்பதற்காக 21 ஆயிரம் சேமிப் புக் கணக்குகள் போலியாகத் தொடங்கப் பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயம் தற்போது காவல்துறையில் புகாராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு அதிகாரிகள் மும்பை காவல் நிலையத்தில் இது தொடர்பான புகாரை பதிவு செய்துள்ள னர். போலி கணக்குகள் மூலம் வங்கி வழங்கிய ரூ.4,355 கோடி கடன் தொகை மறைக்கப்பட்டுள்ளதாக புகாரில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு தனிப்பட்ட கட்டுமான நிறு வனத்துக்கு 44 முறை கடன் வழங்கப் பட்டுள்ளது. வங்கியின் நிதி நிலை மறைக்கப் பட்டுள்ளது. முறைகேடான வங்கிக் கணக்கு கள் எதுவும் வங்கியின் உண்மையான கணக் குப் பதிவேட்டில் அல்லது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படவில்லை என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிதி மோசடி, தவறான, பொய்யான தகவல்கள் அடங்கிய ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட பிரிவு களில் புகார் பதிவாகியுள்ளது. இந்தப் புகாரில் வங்கியின் தலைவர் வர்யாம் சிங் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் ஆகியோரது பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவர் தவிர வங்கியின் மூத்த அதிகாரிகள் சிலர் மீதும் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கியின் மூலமாக ஹவுசிங் டெவலப் மென்ட் அண்ட் இன்பிராஸ்டிரக்சர் லிமிடெட் நிறுவனம் ஆதாயமடைந்ததாகவும் அந்நிறு வனத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் சரங் வாத்வான், ராகேஷ் வாத்வான் ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களில் நடைபெறும் மோசடிகள் குறித்து விசாரிக்கும் அரசு நிறுவனமான எஸ்ஐஎஃப்ஓ இந்தப் பிரச்சினையில் ஹெச்டிஐஎல் மற்றும் பிஎம்சி வங்கிக்கு இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2018-ம் ஆண்டு நிகழ்ந்த மோசடி தொடர்பான விவகாரம் இன்னும் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில் தற்போது அம்பலமாகியுள்ள பிஎம்சி வங்கியின் விவகாரம் வங்கித் துறையை மேலும் பலவீனமாக்கும் என்று கருதப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பு வளையத்திற்குள் ஏறக்குறைய 24-க் கும் அதிகமான கூட்டுறவு வங்கிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் பிஎம்சி வங்கியில்தான் ரூ.11,620 கோடி தொகை டெபாசிட்டாக உள்ளது. இந்த வங்கியில் 9 லட்சம் வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்குகளை வைத்துள்ளனர்.
பிஎம்சி வங்கி புதிய கடன் வழங்கவும் மற்றும் புதிய டெபாசிட்களை ஏற்பதற்கும் 6 மாதங்களுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. மேலும் வங்கியின் டெபாசிட் தாரர்கள் அதிகபட்சம் ரூ.10 ஆயிரம் வரை எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வங்கியின் மீது ரிசர்வ் வங்கி எடுத்துள்ள நடவடிக்கை மற்றும் குற்றச்சாட்டு தொடர்பாக ரிசர்வ் வங்கிக்கு நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் எழுதிய கடிதத்தில், இந்த விஷயத்தை ரிசர்வ் வங்கி பெரிதுபடுத்துவதாகவும், இதனால் வங்கி இதுவரை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த நம்பகத்தன்மை சிதைந்து போகும் என்றும் தெரிவித்துள்ளார்.
பிஎம்சி வங்கி, ஹெச்டிஐஎல் நிறுவனத் துக்கு வழங்கியுள்ள கடன் தொகை மட்டும் ரூ.6,500 கோடியாகும். வங்கி வழங்கியுள்ள ஒட்டுமொத்த கடன் தொகையில் இது 73 சதவீதமாகும். அதாவது வங்கி வழங்கிய கடன் தொகை ரூ.8,800 கோடி. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கும் விதிமுறைகளை பிஎம்சி வங்கி நிர் வாகம் கடைப்பிடிக்கத் தவறியது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.