

புதுடெல்லி
நடப்பாண்டில் சர்வதேச அளவி லான வர்த்தக வளர்ச்சி 1.2 சதவீத அளவுக்குக் குறையும் என உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கணித்துள்ளது. ஏற்கெனவே வர்த்தக வளர்ச்சி 2.6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டது தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் வர்த்தக தேக்க நிலை மற்றும் நாடு களிடையே காணப்படும் வர்த்தக போர் உள்ளிட்டவை காரணமாக வளர்ச்சி விகிதம் குறையும் என்று டபிள்யூடிஓ குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அளவில் வர்த்தகத்தில் தேக்க நிலை நிலவுவது இந்தியா வில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத் தும் என்றும், இந்தியா தனது ஏற்று மதியை அதிகரிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த ஆண்டில் வர்த்தக வளர்ச்சி 2.7 சதவீத அளவுக்கு உயரும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் முந்தைய கணிப்பான 3 சதவீதத்தை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
நாடுகளிடையே நிலவும் வர்த் தகக் கொள்கைதான் வளர்ச்சிக்கு பெரும் முட்டுக் கட்டையாக இருக் கும் என்றும் டபிள்யூடிஓ சுட்டிக் காட்டியுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார சூழல் காரணமாக வளர்ச்சி விகிதம் மேலும் சரிவதற் கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார். வர்த்தக வளர்ச்சி விகி தம் சரிவது மிகவும் கவலையளித் தாலும், இது எதிர்பாராதது என்று டபிள்யூடிஓ இயக்குநர் ஜெனரல் ராபர்டோ அஸ்வெடோ குறிப்பிட் டுள்ளார். இதன் காரணமாக வேலை வாய்ப்பு உருவாக்கம் குறையும் என்றும் குறிப்பாக ஏற்றுமதி வர்த் தகம் சார்ந்த தொழிலில் ஈடுபட் டிருப்போருக்கு வேலையிழப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட் டார். இதுபோன்ற சூழல் உருவா வதைத் தவிர்க்க டபிள்யூடிஓ உறுப்பு நாடுகள் வர்த்தக ஒப்பந்தங் கள் தொடர்பான சச்சரவுகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.
ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா வின் ஏற்றுமதி 6.05 சதவீதம் சரிந்து 2,613 கோடி டாலராக உள்ளது. பெட்ரோலியம், பொறியியல், தோல் தொழில், ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி ஏற்றுமதியில் சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதி மட்டுமின்றி இறக்குமதி யிலும் சரிவு காணப்பட்டுள்ளது. இந்தியாவின் இறக்குமதி 13.45 சதவீதம் சரிந்து 3,958 கோடி டாலராக உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை 1,345 கோடி டாலர் என்று வர்த்தக அமைச்சக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் காணப்படும் சரிவு ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் காரணி யாகும். இதன் காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 5 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.