Published : 02 Oct 2019 08:33 AM
Last Updated : 02 Oct 2019 08:33 AM

கார், வர்த்தக வாகனங்கள் விற்பனை கடும் சரிவு: மாருதி சுஸுகி விற்பனை 24% வீழ்ச்சி; இரு சக்கர வாகன விற்பனை உயர்வு

மாருதி நிறுவனத்தின் மானேசர் ஆலையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்புவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்கள்.

புதுடெல்லி

ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் பெரும்பாலான நிறு
வனங்களின் வாகன விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது. இரு சக்கர வாகனங்களைப் பொறுத்தமட்டில் டிவிஎஸ் மற்றும் சுஸுகி நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன.

நாட்டில் அதிக அளவு கார்களை உற்பத்தி செய்யும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் விற்பனை 24.4 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 1,22,640 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 1,62,290 ஆக இருந்தது. உள்நாட்டில் இந்நிறுவன வாகன விற்பனை 26.7 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 1,12,500 கார்களை மட்டுமே இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 1,53,550 ஆகும். வாகனஏற்றுமதி 17.8 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 7,188 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் இந்நிறுவனம் 8,740 கார்களை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மஹிந்திரா அண்ட் மஹிந்திராஇந்நிறுவனத்தின் வாகன விற்பனை 21 சதவீதம் சரிந்துள்ளது.மொத்தம் 43,343 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 55,022 ஆகும். உள்நாட்டு விற்பனை 21 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 40,692 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதி 29 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 2,651 வாகனங்கள் ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தின் டிராக்டர் விற்பனை 2 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 37,011 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.

டொயோட்டா

இந்நிறுவன வாகன விற்பனை 17 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 10,911 கார்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில்இந்நிறுவனம் 13,078 வாகனங்களை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 708 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது.

அசோக் லேலண்டு

இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 55 சதவீத அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த செப்டம்பரில் இந்நிறுவனம் விற்பனை செய்த வர்த்தக வாகனங்களின் எண்ணிக்கை 8,780 ஆகும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 19,374 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

பஜாஜ் ஆட்டோ

இந்நிறுவனத்தின் விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளது. மொத்தம் 4,02,035 வாகனங்களை இந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்நிறுவனம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை 5,02,009 ஆகும். உள்நாட்டு விற்
பனை 2,15,501 ஆகும். இதில் 31 சதவீத சரிவு காணப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு செப்டம்பரில் 3,11,503 வாகனங்களை இந்நிறு
வனம் விற்பனை செய்திருந்தது. ஏற்றுமதி 2 சதவீதம் சரிந்து 1,86,534 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் 1,90,506 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டிவிஎஸ் மோட்டார்

இந்நிறுவன விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. செப்டம்பரில் இந்நிறுவன வாகன விற்பனை 3,15,912 ஆக உள்ளது. இருசக்கர வாகனங்கள் 3,00,909 ஆகும்.உள்நாட்டு இருசக்கர வாகன விற்பனை 2,43,163 ஆகஉள்ளது. மோட்டார் சைக்கிள் மட்டும் 1,23,921 ஆக உள்ளது. நிறுவனஏற்றுமதி 17 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 61,192 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

சுஸுகி மோட்டார் சைக்கிள்

இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகன விற்பனை 2.11 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 73,658 வாகனங்
களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் இந்நிறுவனம் 72,134 வாகனங்களை விற்பனை செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x