

செல்போன் செயலிகள் மூலம் சேவைகளை வழங்கி வரும் நிறு வனமான ஓலா கேப்ஸ்ஸில் ரத்தன் டாடா முதலீடு செய்திருக்கிறார். இது குறித்து நேற்று பேசிய ரத்தன் டாடா தன்னுடைய தனிப் பட்ட முதலீடாக ஓலா கேப்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி யுள்ளார். இது போன்ற முதலீடு கள் மூலம் முன்னுதார ணமான பிசினஸ் தலைவராக டாடா இருந்து வருகிறார்.
டாடா நிறுவனம் உப்பு முதல் தகவல் தொழில்நுட்பம் வரை அனைத்து துறைகளிலும் ஈடு பட்டு வருகிறது. ரத்தன் டாடா இதற்கு முன்பு தன்னுடைய தனி பட்ட முதலீடாக இ-காமர்ஸ் நிறு வனங்களான ஸ்நாப்டீல், கார்யா டாட் காம் போன்ற ஸ்டார் அப் நிறுவனங்களிலும், சீனா மொபைல் நிறுவனமான ஜியோமி செல் போன் உற்பத்தி நிறுவனத்திலும் முதலீடுகளை மேற்கொண்டிருக் கிறார். ரத்தன் டாடா எவ்வளவு முதலீடு செய்ய உள்ளார் என்கிற விவரங்களை ஓலா வெளியிட வில்லை. ஆனால் ரத்தன் டாடா தன்னுடைய தனிப்பட்ட முதலீடாக ஓலா பங்குகளை வாங்குகிறார்.
இதுகுறித்து சந்தை நிபுணர்கள் கூறியபோது ரத்தன் டாடா தன்னுடைய தனிப்பட்ட முதலீடுகளை பெரிய நிறுவ னங்களில் மேற்கொள்வதில்லை. மாறாக புதிதாக தொடங்கக்கூடிய நிலைத்து நிற்கும் தொழில்களில் முதலீடு செய்வதுடன், ஆலோசக ராகவும் இருந்து வருகிறார் என்று குறிப்பிடுகின்றனர்.
ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட் டைக் கொண்டு ஓலா நிறுவனம் டாக்ஸி பார் ஷியூர் நிறுவனத்தை மார்ச் மாதம் 20 கோடி டாலருக்கு வாங்கியது. இந்தியாவில் இ-காமர்ஸ் வர்த்தகத்தில் நடந்த மிகப்பெரிய டீல் இது. இந்தியாவில் வேகமான வளர்ந்து வரும் அமெரிக்காவை சேர்ந்த உபேர் டாக்ஸி நிறுவனத்தின் போட்டி களை சமாளிக்க ஓலா திட்டமிட்டுள் ளது. சர்வதேச அளவில் முக்கியத் தலைவரான ரத்தன் டாடா எங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்வது எங்களது தொழில் திறமையை அங்கீகரிப்பது போல இருக்கிறது.
அவருடன் சேர்ந்து பணியாற்றி சர்வதேச அளவில் முக்கிய நிறு வனமாக மாற்றுவோம் என்று ஓலா நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பவிஷ் அகர்வால் தெரிவித்தார்.