Published : 01 Oct 2019 06:34 PM
Last Updated : 01 Oct 2019 06:34 PM

ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட்போன் விலை ரூ.699-ஆக அதிரடிக் குறைப்பு

மும்பை,

முகேஷ் அம்பானி தலைமை ரிலையன்ஸ் ஜியோ தனது 4ஜி ஸ்மார்ட்போன் விலையை 53% குறைத்து ரூ.699 என்று அதிரடியாக குறைத்துள்ளது. நாட்டில் உள்ள 35 கோடி 2ஜி போன் பயனாளர்களை ஈர்க்கும் நோக்கத்துடன் ரூ.700 பெறுமான இலவச டேட்டாக்களையும் வழங்க முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட செய்திக் குறிப்பில், “35 கோடி 2ஜி பயனாளர்கள் ஒன்று டேட்டா சேவைகளை ஒட்டுமொத்தமாக துறப்பது அல்லது தரமற்ற 2ஜி டேட்டாக்களுக்காக மிக அதிக விலை கொடுப்பது என்ற இரண்டுக்கும் இடையே தெரிவு செய்வதில் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு இலவச வாய்ஸ் கால்கள் வசதியும் இல்லை, இண்டெர்நெட்டையும் பயன்படுத்த முடியாது. ஆகவேதான் ஜியோ அனைத்து இந்தியர்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்கத்துடன் இது வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளது.

இதனையடுத்து ரிலையன்ஸ் ஜியோ ஸ்மார்ட் போன் தற்போதைய விலையான ரூ.1500லிருந்து ரூ.699ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

இது ரிலையன்ஸ் ஜியோபோன் தீபாவளி 2019 என்று அழைக்கப்படுகிறது. இது தீபாவளி, தசரா உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் நடைமுறையில் இருக்கும்.

“பழைய போனை மாற்றாமலேயே ரூ.800 வரை சேமிக்கக் கூடிய ஆஃபராகும் இது. மற்ற 2ஜி போன்களை விட இது விலை மிகக்குறைவு. ஆகவே 4ஜிக்கு புதுப்பிப்பதற்கான இடையூறுகள் இதன் மூலம் களையப்பட்டுள்ளன” என்கிறது ஜியோ அறிக்கை.

அதாவது 2ஜியிலிருந்து 4ஜிக்கு மாற ரூ.700 பெறுமான டேட்டாக்களை ரிலையன்ஸ் இலவசமாக வழங்குகிறது.

“இதன் படி ஒரு வாடிக்கையாளர் மேற்கொள்ளும் முதல் 7 ரீசார்ஜ்களின் போது ரிலையன்ஸ் ரூ.99 பெறுமான டேட்டாக்களை ரிலையன்ஸ் சேர்த்து வழங்கும். ஆகவே போன் விலையில் ரூ.800 சேமிப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு ரூ.700 பெறுமான டேட்டாக்கள் கூடுதலாகக் கிடைக்கின்றன. எனவே ஒவ்வொரு ஜியோ போனிற்கும் ரூ.1500 பெறுமான கூடுதல் பயன் கிடைக்கிறது என்கிறது ஜியோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x