

முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான வோடபோன் இந்தியா, கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.1,700 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற் கான அறிவிப்பை வோடபோன் வெளியிடலாம் என கடன் முதலீட்டுச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பத்திரங்கள் மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் முதலீட்டுக் காலமாகக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கடன் பத்திர வெளியீடு இந்த மாதம் இருக்கலாம் என்றும் இதற்கு அடுத்து ரூ. 7,500 கோடிக்கு துணை நிலை பத்திரங்கள் மூலம் திரட்ட உள்ளது. இந்த துணை கடன்கள் மூன்று வழியில் வோடபோன் இந்தியா நிறுவனம் திரட்ட உள்ளது.
தற்போது வெளியிட உள்ள பாண்டுகளுக்கு ஆண்டுக்கு 10.25 சதவீத வருமானம் கிடைக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வோடபோன் நிறுவனம் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.150 முதல் ரூ. 200 கோடி முதலீடுகளை மேற்கொள்கிறது என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.